காற்றில் ஈரம் பாடல் வரிகள்

Last Updated: Sep 29, 2023

Movie Name
Veppam (2011) (வெப்பம்)
Music
Joshua Sridhar
Year
2011
Singers
Karthik, Sricharan
Lyrics
Na. Muthukumar
காற்றில் ஈரம் அதை யார் தந்ததோ
கால்கள் நடனம் இட யார் சொன்னதோ
பூமி முடியும் அந்த எல்லை வரை போவோமா
நேற்று நாளை அது பொய்யானதோ
இன்று மட்டும் இங்கு மெய் ஆனதோ
மேகம் அலையும் அந்த வானம் வரை போவோமா

இன்றென்ன இத்தனை இன்பம் இதய கூட்டில் நீந்திடுதே
நடை பாதை பூக்கள் எல்லாம் கைகள் நீட்டிடுதே
நீங்காத புன்னகை ஒன்று உதட்டின் மீது பூத்திடுதே
வாழ்கையை பிடிகிறதே..

காற்றில் ஈரம் அதை யார் தந்ததோ
கால்கள் நடனம் இட யார் சொன்னதோ
பூமி முடியும் அந்த எல்லை வரை போவோமா
நேற்று நாளை அது பொய்யானதோ
இன்று மட்டும் இங்கு மெய் ஆனதோ
மேகம் அலையும் அந்த வானம் வரை போவோமா

ஹோ.. ஒரு நாள், இந்த ஒரு நாள் உயிரோடு இருந்தாலும் வாழும்
பயணம் இந்த பயணம், இது தொடர்ந்திட வேண்டும்
அருகில் உனதருகில், நான் வாழும், நிகழ் காலம் போதும்
நிமிடம், இந்த நிமிடம் இது உறைந்திட வேண்டும்..
மௌனத்தில் சில நேரம், மயக்கத்தில் சில நேரம்
தயக்கத்தில் சில நேரம், இது என்னவோ புது உலகிங்கே…
கண்ணருகில் சிலதூரம், கை அருகில் சிலதூரம்
வழி துணையை கேட்கிறதே வா வா..

ஹோ.. நம் நெஞ்சத்தில் ஓரம் ஏன், இங்கு இத்தனை ஈரமோ
நம் கண்களில் ஓரமா, புது கனவுகள் நூறும்..
இது என்ன இது என்ன, இந்த நாள்தான் திருநாளா??
இதற்காக இதற்காக, காத்திருந்தோம் வெகு நாளா??

இன்றென்ன இத்தனை இன்பம் இதய கூட்டில் நீந்திடுதே
நடை பாதை பூக்கள் எல்லாம் கைகள் நீட்டிடுதே
நீங்காத புன்னகை ஒன்று உதட்டின் மீது பூத்திடுதே
வாழ்கையை பிடிகிறதே..

காற்றில் ஈரம் அதை யார் தந்ததோ
கால்கள் நடனம் இட யார் சொன்னதோ
பூமி முடியும் அந்த எல்லை வரை போவோமா
நேற்று நாளை அது பொய்யானதோ
இன்று மட்டும் இங்கு மெய் ஆனதோ
மேகம் அலையும் அந்த வானம் வரை போவோமா….

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.