மழை வரும் அறிகுறி பாடல் வரிகள்

Last Updated: May 29, 2023

Movie Name
Veppam (2011) (வெப்பம்)
Music
Joshua Sridhar
Year
2011
Singers
Naresh Iyer
Lyrics
Na. Muthukumar
மழை வரும் அறிகுறி, என் விழிகளில் தெரியுதே
மனம் இன்று நனையுதே, இது என்ன காதலா சாதலா?
பழகிய காலங்கள், என் பார்வையில் விரியுதே
பாதைகள் நழுவுதே, இது ஏனோ ஏனோ?

உன் தோளில் சாயும்போது உற்சாகம் கொள்ளும் கண்கள்
நீ எங்கே எங்கே என்று உன்னை தேடி தேடி பார்க்கிறது ..
உன்னோடு போகும் போது பூ பூக்கும் சாலையாவும்
நீ எங்கே என்று என்னை கேட்ட பின்பு வாடிடுதே…

மழை வரும் அறிகுறி, என் விழிகளில் தெரியுதே
மனம் இன்று நனையுதே, இது என்ன காதலா சாதலா?
பழகிய காலங்கள், என் பார்வையில் விரியுதே
பாதைகள் நழுவுதே, இது ஏனோ ஏனோ?

அறியாத ஒரு வயதில் விதைத்தது.. ஹோ..
அதுவாகவே தானாய் வளர்ந்தது.. ஒ ஹோ..
புதிதாய் ஒரு பூவும் பூக்கையில்.. ஹோ..
அட யாரதை யாரதை பறித்ததோ..? ஹோ..
உன் கால் தடம் சென்ற வழி பார்த்து நானும் வந்தேனே
அது பாதியில் தொலைந்ததடா..

நான் கேட்டது அழகிய நேரங்கள்.. ஹோ…
யார் தந்தது விழிகளில் ஈரங்கள்..? ஹோ…
நான் கேட்டது வானவில் மாயங்கள் .. ஹோ…
யார் தந்தது வழிகளில் காயங்கள்..? ஹோ…
இந்த காதலும் ஒரு வகை சித்ரவதை தானே
அது உயிருடன் எரிகுதடா.. ஒ.. ஹோ..

மழை வரும் அறிகுறி, என் விழிகளில் தெரியுதே
மனம் இன்று நனையுதே, இது என்ன காதலா சாதலா?
பழகிய காலங்கள், என் பார்வையில் விரியுதே
பாதைகள் நழுவுதே, இது ஏனோ ஏனோ?

உன் தோளில் சாயும்போது உற்சாகம் கொள்ளும் கண்கள்
நீ எங்கே எங்கே என்று உன்னை தேடி தேடி பார்க்கிறது ..
உன்னோடு போகும் போது பூ பூக்கும் சாலையாவும்
நீ எங்கே என்று என்னை கேட்ட பின்பு வாடிடுதே…

மழை வரும் அறிகுறி, என் விழிகளில் தெரியுதே
மனம் இன்று நனையுதே, இது என்ன காதலா சாதலா?
பழகிய காலங்கள், என் பார்வையில் விரியுதே
பாதைகள் நழுவுதே, இது ஏனோ ஏனோ?

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.