Song lyrics

Irukiraai Illamalum Lyrics

இருக்கிறாய் இல்லாமலும் பாடல் வரிகள்

Last updated Jul 15, 2026

Music
G. V. Prakash Kumar
Year
2015
Singers
G. V. Prakash Kumar
Lyricist
Na. Muthukumar
Irukiraai Illamalum

Lyrics

Irukiraai Illamalum Lyrics

இருக்கிறாய் இல்லாமலும் இருக்கிறாய்
ஆதலால் இருக்கிறேன்
இல்லாமலும் இருக்கிறேன்

எங்கும் உன் முக பிம்பம் நெஞ்சில் வந்தது தாங்கும்
வெற்றிடத்தில் என்னை விட்டு சென்றதேனடி

கண்ணில் நீரது பொங்கும் காதல் வந்தது அங்கும்
சற்று முன்பு புன்னகைத்த முகம் எங்கடி

இருக்கிறாய் இல்லாமலும் இருக்கிறாய்
ஆதலால் இருக்கிறேன்
இல்லாமலும் இருக்கிறேன்

வெளிச்சம் இலாமல் நிழலும் இல்லை
உயிரே நீ இல்லாமல் நானும் இல்லை
விடிந்தும் என் வானில் வண்ணம் இல்லை

பனியில் பாதைகள் மூடும்
வெயிலில் மழை வருமே

அருகினில் வருகையில் உணர்கிற மயக்கத்தை
மறுபடி தா கொஞ்சம்

சுடுகிற மலர்களை தொடுகிற காலனி
கதறுது என் நெஞ்சம்

இனி வரும் இரவிலும் இனி வரும் பகலிலும்
கனவுகள் என் தஞ்சம்
அன்பே வா உயிரே

இருக்கிறாய் இல்லாமலும் இருக்கிறாய்
ஆதலால் இருக்கிறேன்
இல்லாமலும் இருக்கிறேன்

மாற்றம் இல்லாமல் வாழ்க்கை இல்லை
மழை மட்டும் தராது வானவில்லை
ஏனோ என் நெஞ்சம் கேட்கவில்லை

அருகில் இருந்தும் காதல்
பிரிவில் பெருகிடுமே

ஒரு முறை தெரியிது மறு முறை மறையிது
தொலையிது உன் பிம்பம்

கனவுகள் வருவது காலையில் களைவது
காதலில் பேரின்பம்

இது வரை இது வரை இடைவெளி தொடர்ந்திடும்
கேட்க்குது என் நெஞ்சம்
அருகே வா உயிரே

இருக்கிறாய் இல்லாமலும் இருக்கிறாய்
ஆதலால் இருக்கிறேன் இல்லாமலும் இருக்கிறேன்
Daily fan voting Bigg Boss Tamil 10 உங்கள் விருப்பமான போட்டியாளருக்கு வாக்களியுங்கள் Vote now

People

Related People

3 people