ஐயய்யோ புடிச்சிருக்கு பாடல் வரிகள்

Last Updated: May 30, 2023

Movie Name
Saamy (2003) (சாமி)
Music
Harris Jayaraj
Year
2003
Singers
Hariharan, Mahathi
Lyrics
Na. Muthukumar
ஐயய்யோ ஐயய்யோ புடிச்சிருக்கு
உனக்கு என்னை புடிச்சிடுருக்கு
என்னவோ என்னவோ புடிச்சிருக்கு
எனக்கும் உன்னை புடிச்சிருக்கு
துணிச்சல் புடிச்சிருக்கு
உன் துடிப்பும் ரொம்ப புடிச்சிருக்கு
வெகுளித்தனம்தான் புடிச்சிருக்கு
என்னை திருடும் பார்வை புடிச்சிருக்கு
புதிதாய் திருடும் திருடி எனக்கு
முழுதாய் திருடத்தான் தெரியல
(ஐயய்யோ..)

வள்ளுவரின் குரளாய் ரெண்டு வரி இருக்கும்
உதட்டை புடிச்சிருக்கு
காது மடல் அருகே உதடுகள் நடத்தும்
நாடகம் புடிச்சிருக்கு
உன் மடிசார் மடிப்புகள் புடிச்சிருக்கு
அதில் குடித்தனம் நடத்திட புடிச்சிருக்கு
தினம் நீ கனவில் வருவதனால்
ஐயோ தூக்கத்தை புடிச்சிருக்கு....
(ஐயய்யோ..)

காதல் வந்து நுழைந்தால்
போதி மர கிளையில் ஊஞ்சல்
கட்டி புத்தன் ஆடுவான்
காதலிலே விழுந்தால் கட்டபொம்மன் கூட
போர்க்களத்தில் பூக்கள் பறிப்பான்
காலையும் மாலையும் படிக்கும் உன்னை
இன்று காதல் பாடங்கள் படிக்க வைத்தேன்
காவல்காரனாய் இருந்த உன்னை
இன்று கள்வனாய் மாற்றி விட்டேன்....
அடடா அடடா புடிச்சிருக்கு
உனக்கு என்னை புடிச்சிருக்கு
என்னவோ என்னவோ புடிச்சிருக்கு
எனக்கும் உன்னை புடிச்சிருக்கு
(துணிச்சல் புடிச்சிருக்கு..)
புதியாய் திருடும் திருடி எனக்கு
முழுதாய் புடிச்சிருக்கு
புடிச்சிருக்கு புடிச்சிருக்கு..

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.