எனக்கெனவே நீ பாடல் வரிகள்

Movie Name
18 Vayasu (2012) (18 வயசு)
Music
Aaryan Dinesh Kanagaratnam
Year
2012
Singers
Haricharan
Lyrics
Na. Muthukumar
எனக்கெனவே நீ பிறந்தது போலே பறக்கிறேன் பறக்கிறேன் நானே...
எனக்கெனவே நீ வளர்ந்தது போலே குதிக்கிறேன் குதிக்கிறேன் தானே...
கனவும் என் கண்ணில் தோன்றும் விவரம் அறிகின்றேனே..
விழியில் விண்மீன்கள் பூக்கும் புதுமை உணர்கின்றேனே..
இது எதனால் விரும்புகிறேன் புதுவிதமாய் புலம்புகிறேன்..

மழைவரும் போதே நனைவதே பாவம் என நினைப்பேன் முன்னாலே...
குடையிருந்தாலும் நனைந்திடும் ஆசை வருகிறதே உன்னாலே...
எதனையும் நாடா இதயம் வாழ்ந்தது தாளாக...
உன்னையதில் நீயும் வரைந்தாயே ஓவியமாக...
என்கால் இரண்டும் நீ கை காட்டும் ஊரோடு நடை பயில...
அட மே மே... சுகம் நானே..
என்கால் இரண்டும் நீ கை காட்டும் ஊரோடு நடை பயில...
அட மே மே... சுகம் நானே..
இது எதனால் விரும்புகிறேன் புதுவிதமாய் புலம்புகிறேன்..
எனக்கெனவே நீ பிறந்தது போலே பறக்கிறேன் பறக்கிறேன் நானே...
எனக்கெனவே நீ வளர்ந்தது போலே குதிக்கிறேன் குதிக்கிறேன் தானே...

அழுதிடத்தானே விழியென நானும் அறிந்திருந்தேன் முன்னாலே..
அழகிய பூவை ரசித்திடக் கூட முடிகிறதே என்னாலே...
சுவடுகள் ஏதும் பதியா பூமியில் நான் வாழ..
துணைவர ஆசி கொடுத்தயே தேவதை போல...
என் தாயன்பு நீதான் என்று நான் காதலுடன் கரைய...
அலை போலே வரும் நாளே.. ஓ ஓ ஓ
என் தாயன்பு நீதான் என்று நான் காதலுடன் கரைய...
அலை போலே வரும் நாளே..
இது எதனால் விரும்புகிறேன் புதுவிதமாய் புலம்புகிறேன்..

எனக்கெனவே நீ பிறந்தது போலே பறக்கிறேன் பறக்கிறேன் நானே...
எனக்கெனவே நீ வளர்ந்தது போலே குதிக்கிறேன் குதிக்கிறேன் தானே...
கனவும் என் கண்ணில் தோன்றும் விவரம் அறிகின்றேனே..
விழியில் விண்மீன்கள் பூக்கும் புதுமை உணர்கின்றேனே..
இது எதனால் விரும்புகிறேன் புதுவிதமாய் புலம்புகிறேன்..
இது எதனால் விரும்புகிறேன் புதுவிதமாய் புலம்புகிறேன்..

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.