பார்க்காத என்ன பார்க்காத பாடல் வரிகள்

Last Updated: Sep 23, 2023

Movie Name
Aaru (2005) (ஆறு)
Music
Devi Sri Prasad
Year
2005
Singers
Tippu
Lyrics
Na. Muthukumar
பார்க்காத என்ன பார்க்காத
குத்தும் பார்வையால என்ன பார்க்காத
போகாத தள்ளிப் போகாத
என்ன விட்டு விட்டு தள்ளித் தள்ளி போகாத
கொடுத்தத திருப்பி நீ கேட்க
காதலும் கடனும் இல்ல
கூட்டத்தில் நின்னு பாத்துக்கொள்ள
நடப்பது கூத்தும்மில்ல..

பார்க்காத என்ன பார்க்காத
கொத்தும் பார்வையால என்ன பார்க்காத
போகாத தள்ளிப் போகாத
என்ன விட்டு விட்டு தள்ளித் தள்ளி போகாத

வேணா வேணான்ண்ணு நான் இருந்தேன்
நீதானே என்ன இழுத்து விட்ட
போடி போடின்னு நான் துரத்த
வம்புல நீதானே மாட்டி விட்ட

நல்லா இருந்த என் மனச
நாராக கிழிச்சுப் புட்ட
கறுப்பா இருந்த என் இரவ
கலரா மாத்திப் புட்ட

என்னுடன் நடந்த என் நிழல
தனியா நடக்க விட்ட
உள்ள இருந்த என் உசிர
வெளிய மிதக்க விட்ட...

பார்க்காத என்ன பார்க்காத
கொத்தும் பார்வையால என்ன பார்க்காத
போகாத தள்ளிப் போகாத
என்ன விட்டு விட்டு தள்ளித் தள்ளி போகாத

வேணா வேணாண்ணு நினைக்கலையே
நானும் உன்னை வெறுக்கலையே
கானோம் கானோண்ணு நீ தேட
காதல் ஒண்ணும் தொலையலையே

ஒண்ணா இருந்த ஞாபகத்த
நெஞ்சோடு சேர்த்து வச்சேன்
தனியா இருக்கும் வலிய மட்டும்
தனியா அனுபவிச்சேன்

பறவையின் சிறகுகள் பிரிஞ்சா தான்
வானத்தில் அது பறக்கும்
காத்திருந்தால் தான் இருவருக்கும்
காதல் அதிகரிக்கும்

பார்க்காத என்ன பார்க்காத
குத்தும் பார்வையால என்ன பார்க்காத
போகாத தள்ளிப் போகாத
என்ன விட்டு விட்டு தள்ளித் தள்ளி போகாத

கொடுத்தத திருப்பி நான் கேட்க
கடனா கொடுக்கலையே
உனக்குள்ளதானே நான் இருக்கேன்
உனக்கது புரியலையே

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.