சொல் சொல் பாடல் வரிகள்

Last Updated: Oct 01, 2023

Movie Name
Thalaivaa (2013) (தலைவா)
Music
G. V. Prakash Kumar
Year
2013
Singers
Na. Muthukumar
Lyrics
Na. Muthukumar
குழு: சொல் சொல் சொல் அன்பே நி சொல்
நில் நில் நில் போகாதே நில்
சொல் சொல் சொல் சொல்லாமல் சொல்
சொல்வதேல்லாம் கண்ணாலே சொல்

ஆ: ஒரு மஞ்சள் மேகம் வந்து நெஞ்சில் மேதியதும்
காதல் சாரல் என்னை தாக்க
அந்தி மாலை சூரியனும் மேற்கில் வந்து நின்று
உன்னை என்னை ஒன்று சேர்க்க
என்னென்னவோ... தேன்றுதே
என் பெண்ணே உன் நெருக்கம்...
வேண்டுதே கண்ணே கண்ணே...
(குழு: சொல் சொல்)

ஒரு மஞ்சள் மேகம் வந்து நெஞ்சில் மேதியதும்
காதல் சாரல் என்னை தாக்க
அந்தி மாலை சூரியனும் மேற்கில் வந்து நின்று
உன்னை என்னை ஒன்று சேர்க்க

கனவுகள் கேட்குது நீ வர
கை விரல் கேட்குது நீ தோட

பெ: யாரோ என்னை பார்க்க ஒரு என்னம் தோன்றிட
நீயா எனப் பார்ப்பேன் அதை எங்கே சொல்லிட

ஆ: ஆ... என் நேரம் இன்று அவசரமாக மாறிபோனதே
என் செய்கை இன்று ரகசியமாக என்னை ஆளுதே

ஆ, பெ: இலைகளில் பனித்துளி விழுவதும்
வெயில் வந்து அதன் மேலே எழுவதும்
இயற்கை நடக்கிற ரகசிய அன்பே அன்பே...

குழு: சொல் சொல் சொல் அன்பே நி சொல்
நில் நில் நில் போகாதே நில்

பெ: ஒரு மஞ்சள் மேகம் வந்து நெஞ்சில் மேதியதும்
காதல் சாரல் என்னை தாக்க
அந்தி மாலை சூரியனும் மேற்கில் வந்து நின்று
உன்னை என்னை ஒன்று சேர்க்க

இருவரும் ஒரு மொழி பேசலாம்
இடையினில் மௌனத்தில் பேசலாம்

ஆ: பெண்ணே என் நெஞ்சம் என்னும் பூட்டை திறக்க
கண்ணே உன் கண்கள் அது சாவிகொடுக்க

பெ: என் பெயரில் உன் பெயரினை சேர்க்க ஆசை வந்ததே
உன் தோளில் எந்தன் தோள் வந்து சாய நேரம் வந்ததே

ஆ: இது இது இது ஒரு இன்பமா
இது இது இது ஒரு துன்பமா
இன்பமும் துன்பமும் சேர்த்துதான் சொல் சொல்வாய் பெண்ணே...

குழு: சொல் சொல் சொல் அன்பே நி சொல்
நில் நில் நில் போகாதே நில்
(ஆ: ஒரு மஞ்சள்)

குழு: சொல் சொல் சொல் அன்பே நி சொல்
நில் நில் நில் போகாதே நில்
சொல் சொல் சொல் சொல்லாமலே சொல்
சொல்வதேல்லாம் கண்ணாலே சொல்

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.