தெய்வம் என்பதென்ன பாடல் வரிகள்

Last Updated: Sep 24, 2023

Movie Name
Thirudan Police (2014) (திருடன் போலீஸ்)
Music
Yuvan Shankar Raja
Year
2014
Singers
Haricharan, S.P.B. Charan
Lyrics
Na. Muthukumar
தெய்வம் என்பதென்ன உண்மை நான்
கண்டேனே தந்தை தானே
தந்தை வார்த்தையெல்லாம் வேதங்கள்
என்பார்கள் உண்மை தானே
தாயின் அன்பை நாம் அணுஅணுவாக அறிவோம்
தந்தை கண்ணீர் அதை எந்த பிள்ளை வாழ்வில் அறிந்ததுண்டா
தெய்வம் என்பதென்ன உண்மை நான்
கண்டேனே தந்தை தானே

தந்தை தோலின் மீது ஏறி நின்று தானே
பார்த்தோம் அன்று நாமும் உலகத்தையே
நம்மை அறியாமல் மெல்ல வளர்ந்தோமே
அன்று முதல் நூறு இடைவெளியே
மழையினை போலே அவன் பாசம் தினம் ஈரம் சேர்க்கும்
மழைத்துளி நின்றும் மரமேங்கே
அட கண்ணீர் வார்க்கும்
இன்னும் ஒரு ஜென்மம் மண்ணில் பிறப்பேனா
தந்தை அவன் விரலை தொட்டு பிடிப்பேனா

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.