பேசாதே பார்வைகள் பாடல் வரிகள்

Movie Name
Thirudan Police (2014) (திருடன் போலீஸ்)
Music
Yuvan Shankar Raja
Year
2014
Singers
Hariharasudhan
Lyrics
Na. Muthukumar
பேசாதே பார்வைகள் வீசாதே
வேறென்ன மொழி வேண்டும்
மௌனமே போதாதா....
நெருங்காதே நெருங்கியே விலகாதே
வேறென்ன இனி வேண்டும்
மௌனமே போதாதா....
என் நெஞ்சில் வந்தே என்னென்ன செய்தாய்
மிதக்கிறேன் காற்றாக
உன் பேரை தானே என் நெஞ்சில் இன்று
இசைக்கிறேன் பாட்டாக
பேசாதே பார்வைகள் வீசாதே
வேறென்ன மொழி வேண்டும்
மௌனமே போதாதா
கண்ணில் உன்னை அளந்தது கொஞ்சம்
கண்ணை மூடி ரசித்தது கொஞ்சம்
இன்னும் என்ன சொல்ல அன்பே தெரியாமல்
நான் தவித்தேனே
உன்னால் என்னை இழந்தது கொஞ்சம்
உன்னால் என்னை அடைந்தது கொஞ்சம்
இன்னும் என்ன சொல்ல அன்பே புரியாமல்
நான் துடித்தேனே
காதல் என்று சொன்னால் நீண்ட மயக்கம்
இன்று புரிகின்றதே
உன்னால் எந்தன் பெண்மை புதிய தயக்கம்
இன்று அறிகிறதே
நீ என்ன சொல்ல நான் என்ன சொல்ல
வார்த்தைகள் தேவைதானா
நீ என்னை வெல்ல நான் உன்னை வெல்ல
ஆனாலும் இந்த காதல் போரின் யுத்தம் அடங்காதே
பேசாதே பார்வைகள் வீசாதே
வேறென்ன மொழி வேண்டும்
மௌனமே போதாதா
எங்கே எங்கே தொலைந்தது நெஞ்சம்
பெண்ணே பெண்ணே சொல்லிவிடு கொஞ்சம்
உன்னை நம்பி விட்டு வந்தேன் நலம்தானா
என் இதயம் அங்கே
அங்கே அங்கே என்னுடைய நெஞ்சம்
உன்னிடத்தில் வந்திருக்கும் தஞ்சம்
கண்ணில் வைத்து காவல் செய்வாய் என்றதடா
உன் இதயம் இங்கே
தேகம் இரண்டுஆனால் இதயம் ஒன்று
இங்கே துடிக்கின்றதே
தூரம் தள்ளி நின்றும் சுவாச காற்று
நம்மை இணைக்கிறதே
நீ என்ன சொல்ல நான் என்ன சொல்ல
வார்த்தைகள் தேவைதானா
நீ என்னை வெல்லநான் உன்னை வெல்ல
ஆனாலும் இந்த காதல் போரின் யுத்தம் அடங்காதே
பேசாதே பார்வைகள் வீசாதே
வேறென்ன மொழி வேண்டும்
மௌனமே போதாதா
நெருங்காதே நெருங்கியே விலகாதே
வேறென்ன இனி வேண்டும்
மௌனமே போதாதா

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.