உயிரே உயிரேப் பிரியாதே பாடல் வரிகள்

Last Updated: Jun 07, 2023

Movie Name
Santhosh Subramaniam (2008) (சந்தோஷ் சுப்ரமணியம்)
Music
Devi Sri Prasad
Year
2008
Singers
Na. Muthukumar
Lyrics
Na. Muthukumar
ஆண்: உயிரே உயிரேப் பிரியாதே
உயிரைத் தூக்கி எறியாதே
உன்னைப் பிரிந்தால் உலகம் கிடையாதே ஓ ஹோ...
கனவே கனவேக் கலையாதே
கண்ணீர்த் துளியில் கரையாதே
நீ இல்லாமல் இரவே விடியாதே ஓ ஹோ...
பெண்ணே நீ வரும் முன்னே
ஒரு பொம்மை போலே இருந்தேன்
புன்னகையாலே முகவரி தந்தாயே ஓ...
ஆயுள் முழுதும் அன்பே
உன் அருகில் வாழ்ந்திட நினைத்தேன்
அரை நொடி மின்னல் போலே சென்றாயே (உயிரே உயிரே...)

(இசை...)

ஆண்: புல் மேல் வாழும்... பனி தான் காய்ந்தாலும்
தலை மேல் தாங்கிய நேரம்
கொஞ்சம் ஆனால் பொற்காலம்

உன் அருகாமை... அதை நான் இழந்தாலும்
சேர்ந்தே வாழ்ந்த ஒவ்வொரு நொடியின்
நினைவே சந்தோஷம்
கடல் மூழ்கிய தீவுகளை
கண் பார்வைகள் அறிவதில்லை
அது போலே உன்னில் மூழ்கி விட்டேன்.... (உயிரே உயிரே...)

(இசை...)

ஆண்: உன் கை கோர்த்து... அடி நான் சென்ற இடம்
தன்னந்தனியாய் எங்கே வந்தாய் என்றே கேட்கிறதே
உன் தோள் சாய்ந்து... அடி நான் நின்ற மரம்
நிழலை எல்லாம் சுருட்டிக் கொண்டு நெருப்பாய் எரிக்கிறதே
நிழல் நம்பிடும் என் தனிமை
உடல் நம்பிடும் உன் பிரிவை
உயிர் மட்டும் நம்பிட மறுக்கிறதே.... (உயிரே உயிரே...
 

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.