பார்த்து கொண்டே பாடல் வரிகள்

Last Updated: Mar 28, 2023

Movie Name
Sandamarutham (2014) (சண்டமாருதம்)
Music
James Vasanthan
Year
2014
Singers
Saindhavi
Lyrics
Na. Muthukumar
பார்த்து கொண்டே பேசாமல் பேசிக்கொண்டே தூங்காமல்
தூங்கும் எண்ணம் தோன்றாமல் உன்னை யோசித்தேன்

நேரம் காலம் போடாமல் போதும் என்று கூறாமல்
கூடும் வரை மாறாமல் உன்னை வாசித்தேன்

வினோத பார்வையிலே சில விநாடி மூச்சடைப்பாய்
விவாதம் நடத்துவேன் அடிக்கடி பேச

பார்த்துக்கொண்டே பேசாமல் பேசிக்கொண்டே தூங்காமல்
தூங்கும் எண்ணம் தோன்றாமல் உன்னை யோசித்தேன்

நெஞ்சுக்குள்ளே என்னென்னவோ சேர்ந்து கிடக்கு
அதனையும் சொல்லித்தான் ஆசை எனக்கு

ஜன்னல் வழி கண்கள் அது பார்த்து கிடக்கு
உன் கொலு சொலி கேட்கும் தூரம் சொர்கம் எனக்கு

உன் அன்பை விட கோவத்தில் தான் பாசம் அதிகம்
அது உரிமையை விழிச்சத்தில் காத்திடுமே

வினாவை போல் வளைந்தேனே
உன் கனாவில் நான் மிதந்தேனே
விழாமல் விழுந்தேன் உன்னிடம் நானும்

மழலையில் உந்தன் முகம் பார்த்த மனது
மன பெண்ணில் அந்த முகம் தேடியதே

உந்தன் வீடு எனக்கது தூரம் இல்லை
எந்தன் வீடும் என்னை விட்டு பிரிவதில்லை

என் நிழலுக்கு என்னை விட காதல் அதிகம்
அது என்னை முந்தி உந்தன் மீது சாய்ந்திடுமே

வினோத பார்வையிலே சில விநாடி மூள்கடிப்பாய்
விவாதம் நடத்துவேன் அடிக்கடி பேச

பார்த்துக்கொண்டே பேசாமல் பேசிக்கொண்டே தூங்காமல்
தூங்கும் எண்ணம் தோன்றாமல் உன்னை யோசித்தேன்

நேரம் காலம் போதும் என்று கூடும் வரை மாறாமல்
உன்னை வாசித்தேன்

வினோத பார்வையிலே வினாவை போல் வளாய்ந்தேனே
உன் கானாவில் நான் மிதாந்தேன் சில விநாடி மூச்சடைப்பாய்
விழாமல் விழுந்தேன் உன்னிடம் நானும்

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.