பேசாமல் பேசிப்பார்த்தேன் பாடல் வரிகள்

Last Updated: Feb 06, 2023

Movie Name
Devi 2016 (2016) (தேவி)
Music
Gopi Sunder
Year
2016
Singers
Karthik
Lyrics
Na. Muthukumar
பேசாமல் பேசிப்பார்த்தேன்     
பார்க்காமல் மீண்டும் பார்த்தேன்     
புலன் ஐந்தில் பூக்கள் பூத்தே……ன்     
புரியாமல் நெஞ்சைக்கேட்டேன்     
காதல் தான் இது     
போடா போ என்றது     
உன்னைத்தேடியே வரச்சொன்னது     
காதல் தான் இது     
போடா போ என்றது     
உன்னைத்தேடியே வரச்சொன்னது     
அன்பே அன்பில் என்னை வென்றாய் நீயடி     
அன்பே இன்னும் கொஞ்சம் என்னைக்கொல்லடி     
அன்பே அன்பில் என்னை வென்றாய் நீயடி…     
அன்பே இன்னும் கொஞ்சம் என்னைக்கொல்லடி      (பேசாமல்)
     
பகலெல்லாம் இரவாய் மாற     
கனவெல்லாம் உணவாய் மாற     
புது பூமி வானம் பார்க்கிறே……ன்     
நண்பர்கள் எங்கோப்போக     
நாய்க்குட்டி நண்பன் ஆக     
இதுதானா காதல் கேட்கிறே…ன்     
உன்னைப்பா…ர்க்கும் முன் வெறும் பாதை நானடி ஓ…     
உனைப்பா…ர்த்தப்பின் சிற்ப்பம் தானடி      
அன்பே அன்பில் என்னை வென்றாய் நீயடி     
அன்பே இன்னும் கொஞ்சம் என்னைக் கொல்லடி     
அன்பே அன்பில் என்னை வென்றாய் நீயடி     
அன்பே இன்னும் கொஞ்சம் என்னைக் கொல்லடி     
     
காதல்தான் வாராவிட்டால்      
கண்தூக்கம் எங்கோப்போகும்     
வந்தாலும் தூக்கம் போகுதே……ய் ஏஹே ஹே ஹே     
கண்பார்த்து பேசிடும் என்னை     
வேறெங்கோப் பார்த்திட வைத்தாய்     
புதிதாய் ஒரு கூச்சம் தோன்றுதே     
உந்தன் கைகளில் என் கைகள் கோர்க்கிறேன்     
இந்த ஓர் நொடி நான் வாழ்கிறேன்      
அன்பே அன்பில் என்னை வென்றாய் நீயடி     
அன்பே இன்னும் கொஞ்சம் என்னைக் கொல்லடி     
அன்பே அன்பில் என்னை வென்றாய் நீயடி     
அன்பே இன்னும் கொஞ்சம் என்னைக் கொல்லடி      (பேசாமல்)

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.