கோகுலத்து ராதை வந்தாளோ பாடல் வரிகள்

Movie Name
Aanandham (2001) (ஆனந்தம்)
Music
S. A. Rajkumar
Year
2001
Singers
S.P.B. Charan, Sujatha Mohan, Unni Menon, Yugendran
Lyrics
Pa. Vijay

சூடி தந்த சுடர்க்கொடியே சுபவேளை நீ வருக
தேடிக் கொண்ட திரவியமே தேன் மாலை போல வருக
மின்னும் அம்பு விழி சந்திர பிம்பம்
பொன்னொளி வீச மங்கை மைதிலி இவள்
செம்மலர் பாதத் தண்டைகள் ஆட சங்கம் சூழ வருக
ஸ்ரீரங்கன் தாளை அடைய வளர் திங்களாகி வருக......

கோகுலத்து ராதை வந்தாளோ இந்த
கல்யாண தேரிலே...கல்யாண தேரிலே.....
மிதிலை நகர் சீதை வந்தாளோ எங்கள்
வீட்டோடு வாழவே வீட்டோடு வாழவே
அந்த தென்மதுரை மீனாள் விளக்கேற்ற வந்தாள்
சீதனமாய் கையில் தாய்ப்பாசம் கொண்டு வந்தாள் (கோகுல)

பொண்ணு கொண்டு வந்த சீர் வாங்கி வைக்க
பெரிசா வீடு ஒண்ணு கட்டுங்க
தங்க மாப்பிள்ளைக்கு ஈடாக நீங்க
இன்னும் பத்து மடங்கு கொட்டுங்க

உங்க மாப்பிள்ளையின் நெஞ்சை அம்மானை ஆடி
சேலையிலே முடிஞ்சி ஜெயிப்பாளே எங்கள் பொண்ணு
மூணு முழம் மல்லிகைப்பூவும்
கொஞ்சம் அல்வாவும் போதுமே
எந்தப் பெண்ணும் ஆம்பளை நெஞ்சில்
அடி தலை சாஞ்சு மயங்குமே

தஞ்சாவூர் பொம்மப் போலத்தான் உங்க
மாப்பிள்ளைத்தான் தலையாட்டுவான்
தேசிங்கு ராஜன் எங்கண்ணன் ஹோய்
உங்க குதிரை வாலாட்டுமா...

ஏய் தப்பாம எங்கப் பொண்ணு செய்வாளே கண்டீரோ
சிங்கத்தை கட்டிப் போடும் தலைகாணி மந்திரம்
போட்டியெல்லாம் போட்டுப் பாத்தோம்டி
அது நமக்குள்ள தானடி
சோடியத்தான் நல்லாப் பாருடி
மதுர மீனாட்சி சொக்கன்டி....

வெள்ளிப்பனி முற்றத்தில்
வெட்கம் எனும் தோட்டத்தில்
மல்லிகை பூத்ததோ
புது மல்லிகை பூத்ததோ

மாடக் குயில் சத்தத்தில்
மஞ்சள் முகம் நாணத்தில்
மங்கலம் வந்ததோ......
தினம் மங்கலம் வந்ததோ

இனி எங்கள் நெஞ்சக் கூடத்தில் தீபத் திருவிழா
எங்கள் வானில் வெளிச்சம் வீசுதே
சின்ன வெண்ணிலா
எங்கள் அன்புக்கு அண்ணன் பண்புக்கு
தென்றல் சந்தனம் பூசுதோ
எங்கள் வீட்டுக்குள் வீசும் தென்றலாய்
ஒரு தேவதை வந்ததோ ஓ...ஓ....ஓ....ஓ...

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.