சுத்துதே சுத்துதே பூமி பாடல் வரிகள்

Movie Name
Paiyaa (2010) (பையா)
Music
Yuvan Shankar Raja
Year
2010
Singers
Karthik, Sunitha Sarathy
Lyrics
Na. Muthukumar
சுத்துதே சுத்துதே பூமி
இது போதுமடா போதுமடா சாமி

சுத்துதே சுத்துதே பூமி
இது போதுமடா போதுமடா சாமி
ஹே சுத்துதே சுத்துதே பூமி
இது போதுமடா போதுமடா சாமி
ரா ரா ரா ராதே ராதே அழகிய ராதே
பார்வையில் பேசி பேசி பேசி பழகிய ராதே
எதனாலே இந்த மாற்றம் மனசுக்குள் ஏதோ மாய தோற்றம்
எதனாலே இந்த ஆட்டம் இதயத்தில் இன்று ஊஞ்சல் ஆட்டம்
சுத்துதே சுத்துதே பூமி
இது போதுமடா போதுமடா சாமி

சிரித்து சிரித்துத்தான் பேசும் போதிலே வலைகளை நீ விரிக்கிறாய்
சைவம் என்று தான் சொல்லிக்கொண்டு நீ கொலைகளை ஏன் செய்கிறாய்
அங்கும் இங்கும் என்னை விரட்டும் பறவையே
என்ன சொல்ல உந்தன் மிரட்டும் அழகையே
வெட்டவெளி நடுவே அட கொட்ட கொட்ட விழித்தே துடிக்கிறேன்
சுத்துதே சுத்துதே பூமி
இது போதுமடா போதுமடா சாமி
சுத்துதே சுத்துதே பூமி
இது போதுமடா போதுமடா சாமி

இதயம் உருகித்தான் கரைந்து போவதை பார்க்கிறேன் நான் பார்க்கிறேன்
இந்த நிமிடம் தான் இன்னும் தொடருமா கேட்கிறேன் உனை கேட்கிறேன்
இது என்ன இன்று வசந்த காலமா
இடைவெளி இன்னும் குறைந்து போகுமா
இப்பிடி ஓர் இரவும் அட இங்கு வந்த நினைவும் மறக்குமா
ஹேய் சுத்துதே சுத்துதே பூமி
இது போதுமடா போதுமடா சாமி
சுத்துதே சுத்துதே பூமி
இது போதுமடா போதுமடா சாமி
ரா ரா ரா ராதே ராதே அழகிய ராதே
பார்வையில் பேசி பேசி பேசி பழகிய ராதே
உன் அழகை விண்ணில் இருந்து எட்டி எட்டி நிலவு பார்த்து ரசிக்கும்
உன் கொலுசில் வந்து வசிக்க குட்டி நட்சத்திரங்கள் மண்ணில் குதிக்கும்

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.