வெண்ணிலவே தரையில் பாடல் வரிகள்

Last Updated: Mar 31, 2023

Movie Name
Thuppakki (2012) (துப்பாக்கி)
Music
Harris Jayaraj
Year
2012
Singers
Hariharan, Harris Jayaraj, Na. Muthukumar
Lyrics
Na. Muthukumar
வெண்ணிலவே தரையில் உதித்தாய்
ஒரு சிரிப்பில் இதயம் பறித்தாய்
வெண்ணிலவே தரையில் உதித்தாய்
ஒரு சிரிப்பில் இதயம் பறித்தாய்
நீ எனது கனவில் வரவே எழாமல் இருக்கிறேன்
உன் சுவாசம் உயிரை தொடவே விடாமல் பிடிக்கிறேன்

வெண்ணிலவை விழியில் பிடித்தாய்
ஒரு சிரிப்பில் இதயம் பறித்தாய்
நீ எனது கனவில் வரவே எழாமல் இருக்கிறேன்
உன் சுவாசம் உயிரை தொடவே விடமால் பிடிக்கிறேன்

அழகே நீ ஓர் பூகம்பம் தானா ?
அருகே வந்தால் பூ கம்பம் தானா ?
தீயா நீரா தீராத மயக்கம்
தீயும் நீரும் பெண்ணுள்ளே இருக்கும்
அணைத்திட எரிந்திடும் பெண்தேகம் அதிசயமே

வெண்ணிலவே தரையில் உதித்தாய்
ஒரு சிரிப்பில் இதயம் பறித்தாய்

ஒருநாள் கண்ணில் நீ வந்து சேர்ந்தாய்
மறுநாள் என்னை கண்டேனே புதிதாய்
விழிகள் மீனா தூண்டில்கள் என்பேன்
விழுந்தேன் பெண்ணே ஆனந்தம் கொண்டேன்
நிலவரம் கலவரம் நெஞ்சோடு மழைவரும்

வெண்ணிலவே தரையில் உதித்தாய்
ஒரு சிரிப்பில் இதயம் பறித்தாய்
நீ எனது கனவில் வரவே எழாமல் இருக்கிறேன்
உன் சுவாசம் உயிரை தொடவே விடாமல் பிடிக்கிறேன்

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.