Song lyrics

Needhan En Kannadi Lyrics

நீ தான் என் கண்ணாடி பாடல் வரிகள்

Last updated Nov 26, 2026

Music
Vijay Antony
Year
2026
Singers
Vijay Antony
Lyricist
Ekadasi

Lyrics

Needhan En Kannadi Lyrics

நீதான் என் கண்ணாடி
கண்ணே அப்பா நான் நிற்பேன் உன் பின்னாடி
என் தோளில் நீ ஏறி
அந்த வானத்தைப் போய் தூக்கு முன்னேறி

உள்ளங்கை நீருக்குள் வாழும் என் மீன் குட்டி
என் சாமி நீதானடி
எந்தன் நெஞ்சுக்குள் உன் பாதம்
நீதானே என் சுவாசம்
நானே உன் தாயின் மடி

நீதான் என் கண்ணாடி
கண்ணே அப்பா நான் நிற்பேன் உன் பின்னாடி
என் தோளில் நீ ஏறி
அந்த வானத்தைப் போய் தூக்கு முன்னேறி

பாதை போகா ஊரும் கூட்டிப் போவேன் நானும்
உன் சொர்க்கத்துக்குச் சாவி என் சட்டைப் பையில்தானே

பூவும் நாரும் போல நீயும் நானும் தானே
ராணி போல ஏறி என் தேரில் பூவாய் மானே

என் சாமி நீதானே
கொண்டாடித் தீர்ப்பேனே
எப்போதும் உன் பின்னால்
வாழ்வேனே நானே

உன் பொம்மை நான் தானே
நீ கண் மூடு மானே
உன் அம்மா உன் அம்மா நான் தானே

நீதான் என் கண்ணாடி
கண்ணே அப்பா நான் நிற்பேன் உன் பின்னாடி
என் தோளில் நீ ஏறி
அந்த வானத்தைப் போய் தூக்கு முன்னேறி

உள்ளங்கை நீருக்குள் வாழும் என் மீன் குட்டி
என் சாமி நீதானடி
எந்தன் நெஞ்சுக்குள் உன் பாதம்
நீதானே என் சுவாசம்
நானே உன் தாயின் மடி
Daily fan voting Bigg Boss Tamil 10 உங்கள் விருப்பமான போட்டியாளருக்கு வாக்களியுங்கள் Vote now

People

Related People

4 people