Song lyrics

Appava Pola Lyrics

அப்பாவ போல பாடல் வரிகள்

Last updated Nov 26, 2026

Music
Vijay Antony
Year
2026
Singers
Vijay Antony, Meenakshi Elayaraja
Lyricist
Ekadasi

Lyrics

Appava Pola Lyrics

தன்னனானா தன்னனன நா…

அப்பாவ போல இங்க யாரு இருக்கான் மனுஷன்?
அடுத்தபடியாகத் தானே கட்டிக்கிறோம் புருஷன்.
அப்பாவ போல இங்க யாரு இருக்கான் மனுஷன்?
அடுத்தபடியாகத் தானே கட்டிக்கிறோம் புருஷன்.

ஓடா தேய்வாரு
உடம்பும் உசுரும் நோவா
உலகே நீதான்னு
வாழ்ந்தாரு எனக்காக.

ஓடா தேய்வாரு
உடம்பும் உசுரும் நோவா
உலகே நீதான்னு
வாழ்ந்தாரு எனக்காக.

காய்ச்சல் வந்து ஊசி எனக்கு போடயிலே
கண்ணை மூடி அழுதுகிட்டே நிப்பாரு.
காசு துட்டு என்னத்துக்கு வாழ்க்கையிலே?
கடைசி வர எனக்கு வேணும் அப்பாரு.

காய்ச்சல் வந்து ஊசி எனக்கு போடயிலே
கண்ணை மூடி அழுதுகிட்டே நிப்பாரு.
காசு துட்டு என்னத்துக்கு வாழ்க்கையிலே?
கடைசி வர எனக்கு வேணும் அப்பாரு.

அப்பாவ போல இங்க யாரு இருக்கான் மனுஷன்?
அடுத்தபடியாகத் தானே கட்டிக்கிறோம் புருஷன்.

நெத்திக்கு நேரா பொட்டு
அப்பா வச்சு விட்டதில்ல
உச்சி பார்த்து ஒழுங்கா
தலை வாரி விட்டதில்லை.

நெத்திக்கு நேரா பொட்டு
அப்பா வச்சு விட்டதில்ல
உச்சி பார்த்து ஒழுங்கா
தலை வாரி விட்டதில்லை.

ஆனாலும் அதுபோல அழகு
எப்போதும் இருக்காது.
கார்காலம் முடிஞ்சாலும் பாசம்
கொஞ்சூண்டும் குறையாது.

ஆனாலும் அதுபோல அழகு
எப்போதும் இருக்காது.
கார்காலம் முடிஞ்சாலும் பாசம்
கொஞ்சூண்டும் குறையாது.

திருவிழா தெரு திண்ணையிலே உறங்கும்
உறக்கத்தில் கூட அது என் பேர உளறும்.
திருவிழா தெரு திண்ணையிலே உறங்கும்
உறக்கத்தில் கூட அது என் பேர உளறும்.

அப்பாவ போல இங்க யாரு இருக்கான் மனுஷன்?
அடுத்தபடியாகத் தானே கட்டிக்கிறோம் புருஷன்.
அப்பாவ போல இங்க யாரு இருக்கான் மனுஷன்?
அடுத்தபடியாகத் தானே கட்டிக்கிறோம் புருஷன்.

தன்னனானா தன்னனன நா…
Daily fan voting Bigg Boss Tamil 10 உங்கள் விருப்பமான போட்டியாளருக்கு வாக்களியுங்கள் Vote now

People

Related People

5 people