காலம் கலிகாலம் பாடல் வரிகள்

Movie Name
Amarkalam (1999) (அமர்க்களம்)
Music
Bharathwaj
Year
1999
Singers
Srinivas
Lyrics
காலம் கலிகாலம் ஆகிப்போச்சுடா
கம்ப்யூட்டர் கடவுளாக மாறிப்போச்சுடா
ஆம்பளையே தெரியாம கொழந்த பொறக்குது
பொம்பளைங்க சேர்ந்து இங்க குடும்பம் நடக்குது
டப்பு மட்டும் வெச்சிருந்தா போதும் நீங்க
தப்பு கிப்பு செஞ்சாலும் நியாயம்

பொய்யும் சத்தியம் செய்யும் இந்த பூமி எப்படி உய்யும்
இதப் பாக்கப் பாக்க மனுஷன் கொண்ட பக்தி கொறையுது
வினை தீர்க்க வந்த சாமி கூட ஆத்தில் கரையுது

மஹாகணபதி மஹாகணபதி மஹாகணபதி மஹாகணபதி

கண்ணகிக்குக் கோயில் கட்டும் கற்பு மிக்க நாடிது
கற்புன்னா எத்தன லிட்டர் புதுப்பொண்ணு கேட்குது (இசை)
அட சேல பாவாட அது மலையேறிப்போச்சு
மிடியோடு சுரிதாரும் பொது உடையாகிப்போச்சு
போழி புண்ணாக்கு பள்ளி எதுக்கு 
தந்தாலே பட்டம் இருக்கு
ஏட்டில் உள்ளது ஒழுக்கம் அந்து ரோட்டில் வந்ததும் வழுக்கும்
இதப் பாக்கப் பாக்க மனுஷன் கொண்ட பக்தி கொறையுது
வினை தீர்க்க வந்த சாமி கூட ஆத்தில் கரையுது

மஹாகணபதி மஹாகணபதி 
அண்ணனுக்கு ஜே காதல் மன்னனுக்கு ஜே மரத் தமிழனுக்கு ஜே
நம்ம தலைவனுக்கு ஜே ஜே 
தலைவனுக்கு ஜே ஜே தலைவனுக்கு ஜே ஜே

திரையில பொய்கள சொன்னா சாதிசனம் நம்புது
கருத்துள்ள கவிஞ்சன் சொன்னா காத தூரம் ஓடுது (இசை)
அட சத்துள்ள தானியம் அது காணாமப் போச்சு
வெறும் பொக்குள்ள அரிசி பொது உணவாகிப் போச்சு
பாசம் கண்ணீரு பழைய தொல்ல தாயே செத்தாலும் அழுவதில்ல
அட ஏழுகுண்டலவாட இது இன்னைக்குத் திருந்தும் நாடா
அட பாக்கப் பாக்க மனுஷன் கொண்ட பக்தி கொறையுது
வினை தீர்க்க வந்த சாமி கூட ஆத்தில் கரையுது

மஹாகணபதி மஹாகணபதி 

காலம் கலிகாலம் ஆகிப்போச்சுடா (இசை)
கம்ப்யூட்டர் கடவுளாக மாறிப்போச்சுடா (இசை)
ஆம்பளையே தெரியாம கொழந்த பொறக்குது
பொம்பளைங்க சேர்ந்து இங்க குடும்பம் நடக்குது
டப்பு மட்டும் வெச்சிருந்தா போதும் நீங்க
தப்பு கிப்பு செஞ்சாலும் நியாயம்

பொய்யும் சத்தியம் செய்யும் இந்த பூமி எப்படி உய்யும்
இதப் பாக்கப் பாக்க மனுஷன் கொண்ட பக்தி கொறையுது
வினை தீர்க்க வந்த சாமி கூட ஆத்தில் கரையுது

மஹாகணபதி மஹாகணபதி மஹாகணபதி மஹாகணபதி

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.