ஒருத்தி மேலே பாடல் வரிகள்

Movie Name
Jeeva (2014) (ஜீவா)
Music
D. Imman
Year
2014
Singers
Abhay Jodhpurkar, El Fé Choir
Lyrics
Madhan Karky
ஒருத்தி மேலே மீண்டும் மையல் ஆனேன்
தோழியே நீ தூது போடி
ஒருத்தி மேலே மீண்டும் காதல் ஆனேன்
தோழியே நீ தூது போடி

ஏ... ஆண்டாண்டுகள் கடந்தும் மாறாமலே
வாசம் ஒன்றை கொண்டாளடி
கண் சொல்வதை தன் வாயில் கூறாமலே
என்னை கொன்று சென்றாளடி
ஒருத்தி மேலே மீண்டும் மையல் ஆனேன்
தோழியே நீ தூது போடி
ஒருத்தி மேலே மீண்டும் காதல் ஆனேன்
தோழியே நீ தூது போடி

அழகோ அழகோ உனையும் விடவும் குறைவு
ஆனாலுமே செல்வாயா
திமிரோ திமிரோ உனையும் விடவும் அதிகம்
வேண்டாமென சொல்வாயா
முத்தங்கள் நூறு நான் தந்தேன்
கள்ளியாய் தூக்கி போனாளே

என்னிடம் மீண்டும் தாவென்று
கேட்டதும் மௌனம் ஆனாளே
நீ சென்று என் முத்தம் அள்ளி கொண்டு வா

ஒருத்தி மேலே மீண்டும் மையல் ஆனேன்
தோழியே நீ தூது போடி
ஒருத்தி மேலே மீண்டும் காதல் ஆனேன்
தோழியே நீ தூ து போடி

அவளை அவளை ரசித்து கிடந்து விழிகள்
வேறாறையும் பார்க்காதே
அவளை அவளை பழகி தொலைத்த இதயம்
வேறாறையும் ஏற்காதே
தோழியே நீ போய் கேட்டாலும்
காதலே இல்லை சொல்வாளே
காலிலே விழுந்து கேட்டாலும்
பொய்யிலே நம்மை கொல்வாளே
நீயேனும் என் காதல் ஏற்றுகொள்ளடி

இங்க பாரு ஜீவா நீ எவளோ ட்ரை பண்ணாலும்
நீ நெனைக்றது நடக்காது விட்ரு....

ஒருத்தி மேலே மீண்டும் காதல் ஆனேன்
தூது போக யாரும் வேண்டாம்
வெடிக்கும் எந்தன் நெஞ்சின் ஆசை சொல்ல
கண்கள் போதும் வார்த்தை வேண்டாம்
ஏ... ஆண்டாண்டுகள் கடந்தும் மாறாமலே
காதல் ஒன்றை கொண்டேனடி
கண் சொல்வதை உன்வாயில் நீ கூறினால்
நானும் கொஞ்சம் வாழ்வேனடி

ம்ம்... ம்ம்..... ஆஹா ஆஹா ம்... ம்....ஹே...ஹே

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.