எந்தன் குரல் பாடல் வரிகள்

Movie Name
Gokulathil Seethai (1996) (கோகுலத்தில் சீதை)
Music
Deva
Year
1996
Singers
K. S. Chithra
Lyrics
எந்தன் குரல் கேட்டு
உனை தூக்கம் தழுவாதா

எந்தன் குரல் கேட்டு
உனை தூக்கம் தழுவாதா
பந்தம் நான் இல்லை
பரிதாபம் கூடாதா
நண்பனே நண்பனே நண்பனே
இவள் சொல்லும் வேதம் அரங்கேறுமா
உனக்கென்று வாழ்வில் ஓர் நியாயமா
இதை யாரிடம் சொல்லுவேன்
நண்பனே நண்பனே நண்பனே

எந்தன் குரல் கேட்டு
உனை தூக்கம் தழுவாத
பந்தம் நான் இல்லை
பரிதாபம் கூடாதா

இரவென்றும் பகல் என்றும் உனக்கில்லையே
இளங்காலை பொன்மாலை உனக்கில்லையே
மதுவென்னும் தவறுக்கு ஆளாகினாய்
அதற்காக நியாயங்கள் நீ தேடினாய்
ஆயிரம் பூக்களில் ஆனந்தம் காண்கிறாய்
நிறங்களே வேற்றுமை நினைத்திடு நண்பனே
மது கிண்ணம்தனை எடுத்து பெண்ணை விலை கொடுத்து
விழி மூடுமா

எந்தன் குரல் கேட்டு
உனை தூக்கம் தழுவாதா
பந்தம் நான் இல்லை
பரிதாபம் கூடாதா

வரவின்றி செலவானால் தவறில்லையே
வாழ் நாட்கள் செலவானால் வரவில்லையே
நேற்றோடும் இன்றோடும் நீ இல்லையே
நாளை உன் கையோடு உனக்கில்லையே
யாரிடம் தவறில்லை யாரிடம் குறை இல்லை
தூக்கமே நிம்மதி தூங்கிடு நண்பனே
நீ கடந்த காலங்களை களைந்து எறிந்து விடு
விழி மூடுமே

எந்தன் குரல் கேட்டு
உனை தூக்கம் தழுவாதா
பந்தம் நான் இல்லை
பரிதாபம் கூடாதா
நண்பனே நண்பனே நண்பனே

இவள் சொல்லும் வேதம் அரங்கேறுமா
உனக்கென்று வாழ்வில் ஓர் நியாயமா
இதை யாரிடம் சொல்லுவேன்
நண்பனே நண்பனே நண்பனே

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.