ஒரு வானம் தாண்டியே பாடல் வரிகள்

Last Updated: Sep 29, 2023

Movie Name
100% Kadhal (2019) (100% காதல்)
Music
G. V. Prakash Kumar
Year
2019
Singers
Andrea Jeremiah, G. V. Prakash Kumar
Lyrics
ஒரு வானம் தாண்டியே
அன்பே நான் பறக்கிறேன்
இரு மேகம் போலவே
அன்பே நான் மிதக்கிறேன்

உன்னால் உன்னால் என்னுள் இன்று
ஒரு சாரல் அடிக்குதே
முன்னாள் பின்னால் ஐயோ இன்று
என் கால்கள் நடக்குதே

அன்பே அன்பே ஒரு பேரலை
என்னை தாக்கி போகுதே
அன்பே அன்பே இந்த காதலை
நான் என்ன செய்வதோ

உன் வீட்டிலே வாழ்கிறேன்
ஆனாலும் நீ தூரமே
என் தொழிலே சாய்கிறாய்
என் வாலிபம் பாவமே

என் வளையல் ஏங்குதே
தினம் சண்டை போடவே
நாம் அறைகள் தூங்குதே
நாம் காதல் பேசவேவிண்ணோடு தான் மிதக்கிறேன்
என் நட்சத்திரங்களும் நீ தானடி
உன் வானவில் நானடா
என் வானமோ நீயடா

உரையாடும் நேரமே
தடுமாறி போகிறேன்
அதை அறிந்தும் நானுமே
உன்னை திட்டி தீர்க்கிறேன்

உன்னால் உன்னால் என்னுள் இன்று
ஒரு சாரல் அடிக்குதே
முன்னாள் பின்னால் ஐயோ இன்று
என் கால்கள் நடக்குதே

அன்பே அன்பே ஒரு பேரலை
என்னை தாக்கி போகுதே
அன்பே அன்பே இந்த காதலை
நான் என்ன செய்வதோ

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.