நெனவு தெரிஞ்ச நாள் முதலா பாடல் வரிகள்

Last Updated: Jul 17, 2026

Movie Name
Kakkai Siraginilae (2000) (காக்கைச் சிறகினிலே)
Music
Ilaiyaraaja
Year
2000
Singers
K. S. Chithra, Mano
Lyrics
R. V. Udayakumar

நெனவு தெரிஞ்ச நாள் முதலா நீதான் எனக்கு சாமி
கனவில் கூட நீதானே கண்ணில் தெரியும் சாமி
அன்பை பொழிந்து வரும் கங்கையம்மா
நீ மஞ்சள் நிலவுக்கொரு தங்கையம்மா
கண்ணே கண்ணம்மா நீ கோயில் குயிலம்மா
நீ கோயில் குயிலம்மா…..(நெனவு தெரிஞ்ச)

தாய் நீ சேய் போல் தாலாட்டினாய்
என்னை பாராட்டினாய் என்னை
தவமாய்க் கிடந்தேன் சீராட்டினாய்
என்னை நான் பாடுவேன் உன்னை

இந்தக் குயில் சந்தோஷமாய் கண் உறங்கத்தானே
பட்ட துயர் ஒண்ணா ரெண்டா நீயும் எந்தன் தாயே
பாடும் பாட்டு லாலி பாசம் என்னும் வேலி
உந்தன் மடி தாயின் மடிதானே
அன்பில் தினம் தந்தேன் எனை நானே..(நெனவு)

தீபம் எரிய திரியாகியே
நானும் ஒளி காட்டுவேன் நாளும்
உயிரை கரைத்தே உறவாகியே
நானும் வளமாக்குவேன் உன்னை

பொன் நகையும் வெட்கம் கொள்ளும்
புன்னகையை காமி
மண்ணில் உன்னை தத்தெடுத்தான்
இந்த வெள்ளைச் சாமி

நிலவில்லாமல் வானா நீ இல்லாமல் நானா
வேதம் எங்கும் உந்தன் மொழி தானே
வாழ்க்கை எல்லாம் இன்னும் ஒளி தானே..(நெனவு)