அஞ்சாதே கண்ணே பாடல் வரிகள்

Last Updated: Jul 17, 2026

Movie Name
Naaga Nanthini (1961) (நாக நந்தினி)
Music
R. Sudharsanam
Year
1961
Singers
L. R. Eswari
Lyrics

அஞ்சாதே கண்ணே அஞ்சாதே
பிஞ்சான பெண்ணே நீ அஞ்சாதே
அஞ்சாதே கண்ணே அஞ்சாதே
பிஞ்சான பெண்ணே நீ அஞ்சாதே

நஞ்சுறும் நாகமே ஆனாலும் எங்கள்
நெஞ்சினில் வஞ்சனை ஆகாதே
அஞ்சாதே ஒளியே சிங்கார கிளியே
மாறாத செந்தமிழ் தேன்மொழியே (அஞ்சாதே)

மந்திர மாயமும் கண்டோமே - பல
தந்திர யந்திரம் கொண்டோமே
அன்போடு காப்போம் அம்மாவும் ஆவோம்
ஆனந்த வாழ்வே காண்போமே (அஞ்சாதே)