காதல் இல்லாது ஆனந்தம் பாடல் வரிகள்

Last Updated: Jul 16, 2026

Movie Name
Naaga Nanthini (1961) (நாக நந்தினி)
Music
R. Sudharsanam
Year
1961
Singers
A. M. Rajah, K. Jamuna Rani
Lyrics

காதல் இல்லாது ஆனந்தம் ஏது
தனியாக பருவம் இனிமை தராது
உள்ளம் கலந்து உறவாடும்போது
உலகத்தின் மீது நினைவே வராது
உல்லாசத் தென்றல் தாலாட்டுது..(காதல்)

வானோடு மேகம் கதை பேசுதங்கே
மானோடு வேங்கை விளையாடுதிங்கே
வானோடு மேகம் கதை பேசுதங்கே
மானோடு வேங்கை விளையாடுதிங்கே
காணாத இன்பம் கனிந்தாடுதே.....(காதல்)

தேன் மலர் மேலே
கொஞ்சும் தென்றல் போலே
ஆனந்தம் காண்போம் அன்பினாலே
மாறாது எந்தன் உள்ளம் வாழ்வினிலே

வண்ண மயில் போலே வந்து
வலை வீசும் தங்கச் சிலையே
விளையாடும் இன்பக் கிளியே
பறந்தோடி வா வா......(தேன்மலர்)