வீரமுள்ள ஈரமுள்ள பாடல் வரிகள்

Movie Name
Kaalai (2008) (காளை)
Music
G. V. Prakash Kumar
Year
2008
Singers
Manickka Vinayagam
Lyrics
கருப்ப சாமி கருப்ப சாமி
எங்க குல கருப்ப சாமி

உசிலம் பத்தி வடுக பட்டி ஆண்டி பட்டி வாடிப் பட்டி
ஊரை எல்லாம் காத்து நிக்கும் தெய்வம்
கருப்ப சாமி

வீரமுள்ள ஈரமுள்ள ரோசமுள்ள பாசமுள்ள
கருப்பாயி ஆத்தாவோட வம்சம் எங்க வம்சம்

எக்குலமும் ஏத்து நிக்கும் முக்குலத்த காத்து நிக்கும்
கருப்பாயி ஆத்தாவோட வம்சம் இந்த வம்சம்

தெக்கு காத்த கேளு அந்த தென்னங் காத்த கேளு
சோளக் காட்ட கேளு அவ சேதி சொல்லுமே

அச்சம் இங்கு இல்ல அதில் மிச்சம் எதும் இல்ல
கச்ச கட்டி இன்று புகழ் இன்று உச்சம் ஏறி நிற்க்குமே

தொடுமா கள் விழுமா அவ மொளாச்சா நாம விதச்சோம்
அவ இல்லா விட்டா நாம இல்லடா

வீரமுள்ள ஈரமுள்ள ரோசமுள்ள பாசமுள்ள
கருப்பாயி ஆத்தாவோட வம்சம் எங்க வம்சம்

எக்குலமும் ஏத்து நிக்கும் முக்குலத்த காத்து நிக்கும்
கருப்பாயி ஆத்தாவோட வம்சம் இந்த வம்சம்

வாரம் கொடுக்கும் சாமி சத்தியம்
வயலு நிக்கும் பூமி சாத்தியம்
உரம் கொடுத்து தூக்கி விட்டது எவடா

அடுக்கடுக்கா சுத்தம் பண்ணவா
அடிதடியா வித்த பண்ணவா
அவனை எல்லாம் சொத்த பண்ணவா
இவடா

மருது பாண்டி ஆட்டம்
புகழ் மங்கிடாத கூட்டம்

உறவு காத்து இங்கே
என்றும் வாழ்ந்து காட்டுவோம்

சின்ன கருப்பு சாட்சி
அந்த பெரிய கருப்பு சாட்சி

கோப தாபம் விட்டு
அன்பு பாசம் காட்டுவோம்

வீரமுள்ள ஈரமுள்ள ரோசமுள்ள பாசமுள்ள
கருப்பாயி ஆத்தாவோட வம்சம் எங்க வம்சம்

எக்குலமும் ஏத்து நிக்கும் முக்குலத்த காத்து நிக்கும்
கருப்பாயி ஆத்தாவோட வம்சம் இந்த வம்சம்

குமுளி மல காத்து வந்தது
குலவ சத்தம் கேட்டு வந்தது

புது நடைய போட்டு வந்தது
எதுக்கு

திருப்பாச்சி எடுத்த கையில
திருக்குறள எடுக்க வச்சவ

கருப்பாயி கால தொடனும்
அதுக்கு

தேவர் குல மானு
அவ சுருளி மல தேனு

வைகை ஆத்து மீனு
அவ தேவ காட்சிடா

உண்மையாக சொன்ன
அவ எதுக்க வந்து நின்னா

வெள்ளையன தின்னா அந்த
வேலு நாச்சி தான்

வீரமுள்ள ஈரமுள்ள ரோசமுள்ள பாசமுள்ள
கருப்பாயி ஆத்தாவோட வம்சம் எங்க வம்சம்

எக்குலமும் ஏத்து நிக்கும் முக்குலத்த காத்து நிக்கும்
கருப்பாயி ஆத்தாவோட வம்சம் இந்த வம்சம்

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.