அறிவில்லையா அறிவில்லையா பாடல் வரிகள்

Movie Name
Inga Enna Solluthu (2014) (இங்க என்ன சொல்லுது)
Music
Dharan
Year
2014
Singers
Silambarasan
Lyrics
Silambarasan
குட்டிபயலே குட்டிபயலே
எத தேடி நீ ஓடுற
ஓடுற
சுட்டி பயலே சுட்டி பயலே
எதுக்காக நீ அலையற
அலையற
அறிவோடுதான் பொறக்குற
ஆனா வளர்ந்து முட்டாள் ஆகுற
ஆகுற
கடவுள கேள்வி கேட்குற
நான் உன்ன உன்ன கேட்குறேன்

அறிவில்லையா அறிவில்லையா
கொஞ்சம் கூட அறிவில்லையா
புரியலையா புரியலையா
இங்க என்ன சொல்லுதுன்னு புரியலையா

அறிவில்லையா அறிவில்லையா
கொஞ்சம் கூட அறிவில்லையா
புரியலையா புரியலையா
இங்க என்ன சொல்லுதுன்னு புரியலையா

உன் கண்ணுக்கு முன்னாடி
இருக்குது கண்ணாடி
புரிஞ்சாக்கா நீயும் தான் கில்லாடி டா
உருண்டாலும்
பிரண்டாலும்
சிரிச்சாலும்
அழுதாலும்
அதுதான் உன் முன்னாடி நடக்குமடா

இந்த வித்தைய கொஞ்சம் நீ கத்துக்கோ
புரிஞ்சுக்கிட்டு உண்மைய ஒத்துக்கோ
வடிவேல போலத்தான்
கண்ணாடி முன்னாடி
குரங்கு பொம்ம வேல கேட்குறடா
உலகமே மாயைன்னு
அறிவென்ற கண்ணால
கண்ணாடிய ஒடச்சாக்கா தெரியுமடா

அறிவில்லையா அறிவில்லையா
கொஞ்சம் கூட அறிவில்லையா
புரியலையா புரியலையா
இங்க என்ன சொல்லுதுன்னு புரியலையா

அது பெண்ணாக இருந்தாலும்
பொன்னாக இருந்தாலும்
தேடி நீ போனாக்கா
கிடைக்காதுடா
டா
தேடாம ஓடாம அலையாம
இருந்தாக்கா
உலகமே உனக்குத்தான் அடிமையிடா

நல்லவேன் எல்லாம்
நல்லவன் இல்லடா
கெட்டவன் எல்லாம்
கெட்டு போனதில்லடா
நல்லவனா இருந்தாலும்
கெட்டவனா இருந்தாலும்
கண்டிப்பா மோட்சம் தான் கிடைக்காதடா
நல்லவனா இல்லாம
கெட்டவனா இல்லாம
நடுவுல நின்னாக்கா கடவுளடா

திருட்டுபயலே திருட்டுபயலே
எத தேட நீ துடிக்கிற
கள்ளப்பயலே கள்ளப்பயலே
எத நினைச்சு கலங்குற

அறிவோடுதான் பொறக்குற
ஆனா வளர்ந்து முட்டாள் ஆகுற
ஆகுற
கடவுள கேள்வி கேட்குற
நான் உன்ன உன்ன கேட்குறேன்

அறிவில்லையா அறிவில்லையா
கொஞ்சம் கூட அறிவில்லையா
புரியலையா புரியலையா
இங்க என்ன சொல்லுதுன்னு புரியலையா

அறிவில்லையா அறிவில்லையா
கொஞ்சம் கூட அறிவில்லையா
புரியலையா புரியலையா
இங்க என்ன சொல்லுதுன்னு புரியலையா

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.