என்ன புள்ள செஞ்ச பாடல் வரிகள்

Last Updated: Jul 18, 2026

Movie Name
Raman Thediya Seethai (2008) (ராமன் தேடிய சீதை)
Music
Vidyasagar
Year
2008
Singers
Vidyasagar
Lyrics
என்ன புள்ள செஞ்ச நீ ஹோய் பாவி பய நெஞ்ச நீ
என்ன புள்ள செஞ்ச நீ ஹோய் பாவி பய நெஞ்ச நீ
பாக்கையிலே சொக்க வச்ச பறக்கத்தான் றெக்க வச்ச
திக்க வச்ச தெனர வச்ச திசைய தான் உணர வச்ச
தெக்க வச்ச வள்ளுவனா ஒத்தையிலே நிக்க வச்ச
என்ன புள்ள செஞ்ச நீ ஹோய் பாவி பய நெஞ்ச நீ

கொள்ளகாரன் நானே கொள்ளையாகி போனேன்
ஹே மிச்சம் மீதி ஏதும் இல்ல எல்லாம் தொலைச்சேனே
தேதி போல நாளும் தேஞ்சு போகும் தேகம்
நான் தேஞ்ச போதும் வளருதே காதல் தேயாம
தண்ணீரில் உண்டாகும் மீன்கள்
ஹே தண்ணீரில் வேகின்ற மாயம்
உன்னாலே வாழ்கின்ற நெஞ்சு
ஹே உன்னாலே ஏன் இந்த காயம்
என் வாழ்க்கையே நீ வந்து தான் ஆரம்பமே ஆகும்
என்ன புள்ள செஞ்ச நீ …
பாவி பய நெஞ்ச நீ

ஒன்ன பாத்த வேள உடம்பும் செங்கல் சூலை
ஹே செம்பரப்பு அருவியா நீயே வந்தாயே
பாத மண்ண பிசைஞ்சே பான போல வனைஞ்சேன்
ஹே என்ன நீயே என்னிடமே மாத்தி தந்தாயே
எப்போதும் உன் பேரை சொல்லி
என் உள் நாக்கும் தாண்டோர போடும்
உப்பாத்தில் மீனாக தானே
ஹே அப்போது உன் பிம்பம் ஆடும்
என் வாழ்க்கையே நீ வந்து தான் ஆரம்பமே ஆகும்
என்ன புள்ள செஞ்ச நீ
பாவி பய நெஞ்ச நீ
என்ன புள்ள செஞ்ச நீ
பாவி பய நெஞ்ச நீ
பாக்கையிலே சொக்க வச்ச பறக்கத்தான் றெக்க வச்ச
திக்க வச்ச தெனர வச்ச திசைய தான் உணர வச்ச
தெக்க வச்ச வள்ளுவனா ஒத்தையிலே நிக்க வச்ச