கம்பிக்கர வேட்டி பாடல் வரிகள்

Last Updated: Feb 02, 2023

Movie Name
Komban (2015) (கொம்பன்)
Music
G. V. Prakash Kumar
Year
2015
Singers
Ananthu, VM Mahalingam
Lyrics
Mahalingam
கம்பிக்கர வேட்டி கண்ணு ரெண்டும் ஈட்டி
வம்பு தும்பு செஞ்சா கூறு போடும் மீசை காரன்

நம்ம பெத்தெடுத்த மண்ண குத்தங்கொறை சொன்ன
சுத்தி அடி சுத்தி சூறை ஆடும் ரோஷக்காரன்

அட சொந்த புத்தி உண்டு மூளக்குள்ள
சொல்லு புத்தி ஒன்னும் தேவை இல்ல

தத்துவத்த புழிஞ்சி ஊத்த வல்ல
ரோஷத்துக்கு பொறந்த மூத்த புள்ள

கம்பிக்கர வேட்டி கண்ணு ரெண்டும் ஈட்டி
வம்பு தும்பு செஞ்சா கூறு போடும் மீசை காரன்

நம்ம பெத்தெடுத்த மண்ண குத்தங்கொறை சொன்ன
சுத்தி அடி சுத்தி சூறை ஆடும் ரோஷக்காரன்

சேலைக்கு பின்னாடி மோப்பம் புடிக்கும்
நாய் வால வெட்டணும் டா

அட நம்மூரு பொண்ணுங்க
நம் மேல வைக்குற நம்பிக்க முக்கியம் டா

தொன்னூர தாண்டியும் நெஞ்ச நிமித்தும்
பாட்டிய பாத்துக்கடா

அவ பொன்னான காலடி மண்ணள்ளி நீ பூசி
பாவத்த தீத்துக்க டா

அடிச்சி சத்தியம் செய்யுறேன் டா
கருப்பு சாமிக்கு நான் புள்ள டா
எதையும் சாதிக்கும் ஆம்புள்ள டா

கட்டுத் தரி அத்துகிட்டு பறக்கும் காள டா
சுத்து பத்தி எட்டு ஊர கலக்கும் பாரு டா

எதிராளா வந்துராத நரிவேல செஞ்சிராத
நெஞ்சுக்குள்ள அச்சம் இல்ல ஒரசி பாரு டா

பஞ்சுக்குள்ள அக்கினிய
மரச்சதாறு டா

எத கட்டி ஆள போற சரி கட்டி வாழ போற
கிடி கிட்டி தப்பு தாரா கிழித்தட்டும் நம்ம ஊர

பள்ளிக்கூடம் சொல்லும் பாடம் அங்க வேற
நம்ம பட்டிக்காட்டு பாடம் தாண்டா இப்ப தேவ

அட எப்ப தாண்டா ஊரு நாடா பாக்க போற

ய்யே வெல்லும் புலி ஒரு நாளும் புல்ல திங்க போகாது
ஒத்தைக்கு ஒத்தைய பாக்கும் புது ரத்தது வாசத்த கேக்கும்

வெறி உச்சத்தில் ஆடித் தான் தீக்கும்
இது சொல்லாம கொல்லாம வெளங்கும்
அத சொன்னாலே தன்னால கலங்கும்

எவன் பின்னால நிக்காத வீரத் தானே
எந்நாலும் நம்பு நீ வணங்கும்

புலி ஒத்தைக்கு ஒத்தைய பாக்கும் புது ரத்தது வாசத்த கேக்கும்
வெறி உச்சத்தில் ஆடித் தான் தீக்கும் இது சொல்லாம கொல்லாம வெளங்கும்

அத சொன்னாலே தன்னால கலங்கும் எவன் பின்னால நிக்காத வீரத் தானே
எந்நாலும் நம் பூமி வணங்கும் சொல்லி கொடுப்போம்

கம்பிக்கர வேட்டி கண்ணு ரெண்டும் ஈட்டி
வம்பு தும்பு செஞ்சா கூறு போடும் மீசை காரன்

நம்ம பெத்தெடுத்த மண்ண குத்தங்கொறை சொன்ன
சுத்தி அடி சுத்தி சூறை ஆடும் ரோஷக்காரன்

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.