அப்பப்பா காய்ச்சல் விட்டு பாடல் வரிகள்

Movie Name
Komban (2015) (கொம்பன்)
Music
G. V. Prakash Kumar
Year
2015
Singers
G. V. Prakash Kumar, Shreya Ghoshal
Lyrics
Mahalingam
அப்பப்பா காய்ச்சல் விட்டு போச்சு
அச்சச்சோ காதல் நோவு ஆச்சு

முத்தத்தில் பத்து போடு பேச்சு
மொத்தத்தில் என்ன கஞ்சு காச்சு

பத்தியத்த முறிக்காத உங்க கையி
முப்பாலின் மூணாம் பால் சேத்து வைய்யி
அப்பாவா நீ ஆக சேட்ட செய்யி

வெக்கத்த பக்கம் வந்து பாத்து
வீராப்பு பட்டு பட்டு போச்சு

மல்லி பூ கூந்தல் மோந்து பாத்து
மச்சமோ நட்சத்திரம் ஆச்சு

தப்பு தண்டா செய்யாத வீரன் தாண்டி
உன்கிட்ட நடப்பேனே தப்ப தாண்டி
ஒப்பேத்த மாட்டேண்டி கிட்ட வாடி

வீட்டுல மத்தவங்க பாகாதப்போ சீண்டுவே
பாத்துட்டா சமாளிக்க ஏதோ ஒன்னு நோண்டுவே

பாப்பேன் அப்ப பாப்பேன் அந்த அசட்டு சிரிப்பததான்
ஆனா எதிர் பாப்பேன் அந்த திருட்டு தனத்ததான்

ரொம்ப தான் அக்கறையா வேலை எல்லாம் பாக்குற
அம்புட்டும் என்ன பாக்க வைக்க தானே செய்யுற

உன் கண்ணு மட்டும் தாண்டி வேற எங்கோ பாக்குது
ஆனா ஒடம்பெல்லாம் இந்த கண்ணா தாக்குது

அப்பப்பா காச்சல் விட்டு போச்சு
அச்சச்சோ காதல் நோவு ஆச்சு

யே சொம்புல தண்ணி மோந்து மேலு கூச ஊத்துற
நெஞ்சுல சாச்சி வச்சு முந்தானைய தொவதுற

போதும் இது போதும் பஞ்சு பஞ்சா பறக்குற
நெஞ்சான் குளிக்குள்ள வந்து நீச்சல் அடிக்குற

செவந்தி நெத்தி மேல பச்ச குத்தி காட்டுனேன்
வேலாந்தி நெஞ்சுக்கார உன்ன வண்ணம் தீட்டுவேன்

நூறு ஜென்மம் போதாதைய வேண்டி கெஞ்சுவேன்
பாசம் அன்பில் தானே பெத்த தாய மிஞ்சுவேன்

அப்பப்பா காய்ச்சல் விட்டு போச்சு
அச்சச்சோ காதல் நோவு ஆச்சு

முத்தத்தில் பத்து போடு பேச்சு
மொத்தத்தில் என்ன கஞ்சு காச்சு

பத்தியத்த முறிக்காத உங்க கையி
முப்பாலின் மூணாம் பால் சேத்து வைய்யி

அப்பாவா நீ ஆக சேட்டே செய்யி
வேக்காத பக்கம் வந்து பாத்து
வீராப்பு பட்டு பட்டு போச்சு

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.