Ninaikkum Pothu Lyrics
நினைக்கும்போது நெஞ்சும் பாடல் வரிகள்
Last Updated: Jul 01, 2026
Movie Name
Kalai Arasi (1963) (கலை அரசி)
Music
K. V. Mahadevan
Year
1963
Singers
P. Bhanumathi
Lyrics
நினைக்கும்போது நெஞ்சும் கண்ணும்
துடிப்பது ஏனோ?
நிறைந்த உறவில் கனிந்த காதல்
நிலையிதுதானோ?
அணையை மீறும் ஆசை வெள்ளம்
அறிவை மீறுதே
அதையும் மீறி பருவகாலம்
துணையைத் தேடுதே!...
நினைக்கும்போது நெஞ்சும் கண்ணும்
துடிப்பது ஏனோ?
சுவரில்லாத வீடுமில்லை
உயிரில்லாத உடலுமில்லை
அவரில்லாமல் நானுமில்லை அன்பு சாட்சியே!
உனக்கு நானும் எனக்கு நீயும்
உரிமைத்தேனேன்று கணக்கில்லாத கதைகள் பேசிக்
கலந்ததை இன்று......
நினைக்கும்போது நெஞ்சும் கண்ணும்
துடிப்பது ஏனோ?
துடிப்பது ஏனோ?
நிறைந்த உறவில் கனிந்த காதல்
நிலையிதுதானோ?
அணையை மீறும் ஆசை வெள்ளம்
அறிவை மீறுதே
அதையும் மீறி பருவகாலம்
துணையைத் தேடுதே!...
நினைக்கும்போது நெஞ்சும் கண்ணும்
துடிப்பது ஏனோ?
சுவரில்லாத வீடுமில்லை
உயிரில்லாத உடலுமில்லை
அவரில்லாமல் நானுமில்லை அன்பு சாட்சியே!
உனக்கு நானும் எனக்கு நீயும்
உரிமைத்தேனேன்று கணக்கில்லாத கதைகள் பேசிக்
கலந்ததை இன்று......
நினைக்கும்போது நெஞ்சும் கண்ணும்
துடிப்பது ஏனோ?