Song lyrics

Panjangam Parthu Maalai Lyrics

பஞ்சாங்கம் பார்த்து மால மாத்து பாடல் வரிகள்

Last updated Jul 17, 2026

Music
M. S. Viswanathan
Year
1989
Singers
Malasiya Vasudevan
Lyricist
Muthubharathy
Panjangam Parthu Maalai

Lyrics

Panjangam Parthu Maalai Lyrics

பஞ்சாங்கம் பார்த்து மால மாத்து
பொண்டாட்டி வேணாம் ஆள மாத்து
உன்னப் போல யாருமில்லையே
போட்டியிட்டு உன்னை வெல்ல ஆளுமில்லையே

உன் பாட்டுக்கென்று கூட்டம் காத்திருக்கும்
உன் ஆட்டத்தையும் கண்கள் பாத்திருக்கும்
இந்த காதல் கிளிக்கொரு வானம் இருக்குது
கூண்டில் அடைபடுமா ஹேய்....

பஞ்சாங்கம் பார்த்து மால மாத்து
பொண்டாட்டி வேணாம் ஆள மாத்து

காலேஜு பாடமெல்லாம் போரடிக்கும் டீனேஜு
டீனேஜு முடியும் முன்னே உனக்கெதுக்கு மேரேஜு
காலேஜு பாடமெல்லாம் போரடிக்கும் டீனேஜு
டீனேஜு முடியும் முன்னே உனக்கெதுக்கு மேரேஜு

பாடம் இனியேது நீதான் வாத்தியாரு
பாடம் இனியேது நீதான் வாத்தியாரு
படிச்சது போதாதா....எங்களுக்கும்...
சொல்லித் தர வேணாமா.....ஆமா ஆமா

காதல் பாடம் நீ சொல்லும் நேரத்தில்
காலேஜு பாடம் எதுக்கு
நம்ம பக்கம் இனிக்கிற சொர்க்கம் இருக்கையில்
பாடம் படிக்கணுமா...ஹோய்....

பஞ்சாங்கம் பார்த்து மால மாத்து
பொண்டாட்டி வேணாம் ஆள மாத்து

ஏமாற ஆளிருந்தா உன் கையில் ராஜாங்கம்
ஏனென்று கேட்டாலே உன் நெஞ்சு பழி வாங்கும்
ஏமாற ஆளிருந்தா உன் கையில் ராஜாங்கம்
ஏனென்று கேட்டாலே உன் நெஞ்சு பழி வாங்கும்

ஆசை மாறும்போது ஆள மாத்த வேணும்
ஆசை மாறும்போது ஆள மாத்த வேணும்

போகிற திசை தோறும்......உன்னப் பத்தி
ஆயிரம் கதை பேசும்.....சொன்னாலென்ன
காலம் நேரம் நல்லா இருக்கும் வரை
உம்பாடு எந்நாளும் கொண்டாட்டம்தான்
பலர் அஞ்சி நடக்கவும் கெஞ்சி கிடக்கவும்
வெள்ளிப் பணம் இருக்கு....ஹோய்...

பஞ்சாங்கம் பார்த்து மால மாத்து
பொண்டாட்டி வேணாம் ஆள மாத்து
உன்னப் போல யாருமில்லையே
போட்டியிட்டு உன்னை வெல்ல ஆளுமில்லையே

உன் பாட்டுக்கென்று கூட்டம் காத்திருக்கும்
உன் ஆட்டத்தையும் கண்கள் பாத்திருக்கும்
இந்த காதல் கிளிக்கொரு வானம் இருக்குது
கூண்டில் அடைபடுமா ஹேய்....

பஞ்சாங்கம் பார்த்து மால மாத்து
பொண்டாட்டி வேணாம் ஆள மாத்து

People

Related People

4 people