Song lyrics

Ponkiyadhe Kaadhal Vellam Lyrics

பொங்கியதே காதல் வெள்ளம் பாடல் வரிகள்

Last updated Jul 18, 2026

Music
Devendran
Year
1986
Ponkiyadhe Kaadhal Vellam

Lyrics

Ponkiyadhe Kaadhal Vellam Lyrics

பொங்கியதே காதல் வெள்ளம்
துள்ளியதே ஆசை உள்ளம்
பொங்கியதே காதல் வெள்ளம்
துள்ளியதே ஆசை உள்ளம்
கண்ணில் நிலா முகம் உலவியது
எந்தன் மனம் தினம் இளகியது
கண்ணில் நிலா முகம் உலவியது
எந்தன் மனம் தினம் இளகியது
இருவிழியில் நவரசமோ வழியுது
அனுபவம் இனியது புதியது

பொங்கியதே காதல் வெள்ளம்
துள்ளியதே ஆசை உள்ளம்


பள்ளிப்பாடம் வாசித்தால் 
பள்ளிப்பாடம் வாசித்தால்
நீதானே கண்ணில் வந்தாய்
பொன்மேகம் விண்ணோடு
எந்நாளும் என்னுள்ளம் உன்னோடு
உன்னோடு உன்னோடு உன்னோடு

எந்த சொந்தம் யாரோடு
யாரிங்கே சொல்லக்கூடும்
காலம் நேரம் சேரட்டும்
கன்னிப்பூ மாலை சூடும்
பண்பாடு மாறாமல் எப்போதும்
பண்பாடு என்னோடு என்னோடு என்னோடு என்னோடு

கடல் கூட குளமாகும் என் காதல் மாறாது

பொங்கியதே காதல் வெள்ளம்

ஆ..ஹா..துள்ளியதே ஆசை உள்ளம்

ஆ.ஆ.. ஆ..ஆ..ஆ.. ஆ..ஆ.


ஏழை முல்லை பெண் பிள்ளை 
ஏழை முல்லை பெண் பிள்ளை
சொல்லத்தான் வார்த்தை இல்லை
என் பெண்மை தாளாது
என்றாலும் இப்போது சொல்லாது
சொல்லாது சொல்லாது சொல்லாது

கண்ணால் பாரு பெண் பூவே
வாய் வார்த்தை தேவை இல்லை
உன்னைப்பற்றி கவி பாட
ஊமைக்கு ஞானம் இல்லை
நீரின்றி மீனில்லை அம்மாடி
நீயின்றி நானில்லை நானில்லை நானில்லை நானில்லை

உனக்காக என் பெண்மை தவம் செய்தால் தப்பில்லை

பொங்கியதே காதல் வெள்ளம்
துள்ளியதே ஆசை உள்ளம்

கண்ணில் நிலா முகம் உலவியது
எந்தன் மனம் தினம் இளகியது
இருவிழியில் நவரசமோ வழியுது
அனுபவம் இனியது புதியது

பொங்கியதே காதல் வெள்ளம்

ம்...

துள்ளியதே ஆசை உள்ளம்
Daily fan voting Bigg Boss Tamil 10 உங்கள் விருப்பமான போட்டியாளருக்கு வாக்களியுங்கள் Vote now

People

Related People

3 people