ஊமை நெஞ்சின் சொந்தம் பாடல் வரிகள்

Movie Name
Manithanin Marupakkam (1986) (மனிதனின் மறுபக்கம்)
Music
Ilaiyaraaja
Year
1986
Singers
K. J. Yesudas
Lyrics
ஊமை நெஞ்சின் சொந்தம்
இது ஒரு உண்மை சொல்லும் பந்தம்
ஊமை நெஞ்சின் சொந்தம்
இது ஒரு உண்மை சொல்லும் பந்தம் 
வார்த்தைகள் தேவையா 
மௌனமே கேள்வியா 
ஊமை நெஞ்சின் சொந்தம் 
இது ஒரு உண்மை சொல்லும் பந்தம் 
ஊமை நெஞ்சின் சொந்தம் 
இது ஒரு உண்மை சொல்லும் பந்தம் 

நேற்று பார்த்த பார்வையோ 
கேள்வி கேட்டு பார்த்தது 
ஐயம் தீர்ந்து போனதால் 
அன்பு நீரை வார்த்தது 
நேற்று பார்த்த பார்வையோ 
கேள்வி கேட்டு பார்த்தது 
ஐயம் தீர்ந்து போனதால் 
அன்பு நீரை வார்த்தது 
பாறை மனதில் பாசம் வந்தது 
பந்தம் வந்த பின்னே 
ஒரு பாசம் வந்ததென்ன 
கண்டு கொண்ட பின்னே 
அடி கண்ணில் ஈரம் என்ன 
விதி என்ன விடை என்ன 
இது சொல்லிக் கொள்ளும் சொந்தம் அல்ல 
ஊமை நெஞ்சின் சொந்தம் 
இது ஒரு உண்மை சொல்லும் பந்தம் 
ஊமை நெஞ்சின் சொந்தம் 
இது ஒரு உண்மை சொல்லும் பந்தம் 

ஆ ஆ ஆ ஆ ஆ ஆ 
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ 
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

கால தேவன் ஏட்டில் அன்று 
பக்கம் மாறி போனது 
உண்மை வந்து சாட்சி சொல்ல 
இன்று நன்மை சேர்ந்தது 
கால தேவன் ஏட்டில் அன்று 
பக்கம் மாறி போனது 
உண்மை வந்து சாட்சி சொல்ல 
இன்று நன்மை சேர்ந்தது 
ரெண்டு உள்ளமும் கண்டு கொண்டது 
போதும் துன்பம் போதும் 
இனி பூக்கள் தோன்றும் மாதம் 
காலம் உண்மை கூறும் 
மனக் காயம் இங்கு ஆறும் 
இரு கண்ணில் மழை வெள்ளம் 
அது மௌனத்தாலே நன்றி சொல்லும் 
ஊமை நெஞ்சின் சொந்தம் 
இது ஒரு உண்மை சொல்லும் பந்தம் 
ஊமை நெஞ்சின் சொந்தம் 
இது ஒரு உண்மை சொல்லும் பந்தம் 
வார்த்தைகள் தேவையா 
மௌனமே கேள்வியா 
ஊமை நெஞ்சின் சொந்தம் 
இது ஒரு உண்மை சொல்லும் பந்தம் 
ஊமை நெஞ்சின் சொந்தம் 
இது ஒரு உண்மை சொல்லும் பந்தம்

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.