சின்னக் குட்டி நடையப் பாரு பாடல் வரிகள்

Last Updated: Jul 18, 2026

Movie Name
Deivame Thunai (1959) (தெய்வமே துணை)
Music
S. M. Subbaiah Naidu
Year
1959
Singers
P. Leela
Lyrics

சின்னக் குட்டி நடையப் பாரு
சித்தெறும்பாட்டம் – இந்த
சின்னக் குட்டி நடையப் பாரு
சித்தெறும்பாட்டம் – நான்

கண்ணை வெட்டி கழுத்தையாட்டி
கையை நீட்டி மருந்து வித்தா
கூடுற கூட்டம் எதேஷ்டம்
கூடுற கூட்டம்.....ஓ......சாமி......(சின்ன)

நன்றி கெட்ட கூட்டத்துக்கு நல்ல
மருந்து இருக்கு அத சொல்லட்டுமா உனக்கு
நாயின் வால அளவெடுத்து நாலங்குலம் நறுக்கு
அதத் தைலமாக இறக்கு

நாற்பது நாள் தலையில் வச்சு தேச்சுப்பாரு
அதுக்கு பலன் தெரிஞ்சுக்கலாம் பிறகு
நடத்தை மாறி நாயைப் போல
காலை சுத்தித் திரியும்
நம்மை கண்டவுடன் குழையும் – இந்த (சின்ன)

ஐயா கருக்கா பல்லு......
ஆலும் வேலும் சேத்து செஞ்ச
அற்புத பல்பொடி இருக்கு – இதை
வாங்கிப் பல்லையும் விளக்கு
பளபளப்பான பல்லைப் பார்த்து
பருவப் பெண்ணும் மயங்கும் – உன்னை
பாசத்தோட நெருங்கும்....ஆ....ஆ..ஆ...

பானைத் தொந்தி கரைவதற்கு
மருந்து தேவையில்லே
நல்லா கேளுங்கோ என் சொல்ல
பாடுபட்டு வேளை செஞ்சா
ஊளைச் சதையும் கரையும்
மனப் பாரங் கூடக் கொறையும் – இந்த (சின்ன)

கட்சி விட்டு கட்சி தாவும் புத்தியுள்ள பேர்க்கு
ஒரு புது மருந்து இருக்கு
பற்றியதைக் கைவிடாத உடும்பு மூளைச் சரக்கு
இதை உண்டால் தீரும் கிறுக்கு – இந்த (சின்ன)