மலராத மலரெல்லாம் பாடல் வரிகள்

Last Updated: Jul 18, 2026

Movie Name
Deivame Thunai (1959) (தெய்வமே துணை)
Music
S. M. Subbaiah Naidu
Year
1959
Singers
P. Susheela, T. M. Soundararajan
Lyrics

மலராத மலரெல்லாம் மலரவே
மகிழாத மனமெல்லாம் மகிழவே
நிலவோடு தாரகையும் வாழ்த்தவே
நித்திலம் போல் வந்துதித்தாய் மைந்தனே (மலராத)

கனியூறும் பாலன் முகம் போலவே
காணுகின்ற வெண்ணிலவே உன்னையே
இனிதாக ஒன்று கேட்பேன் கூறுவாய்
இவனைப் போல மழலைப் பேசத் தெரியுமா (மலராத)

இன்ப மணம் வீசுகின்ற தென்றலே
எழிலோடு பூத்திருக்கும் மலர்களே
அன்பான தந்தை இவர் போலவே
அகிலத்தில் வேறு எங்கும் உண்டுமா..(மலராத)

அன்னை போல அன்பு கொண்ட நாயகி
அடியாள் போல் பணி புரியும் பெண்மணி
உன்னைப் போல வையகத்தில் உண்டுமா
என்னைப் போல பாக்யசாலி யாரம்மா..(மலராத)