ஓ பட்டர்பிளை பட்டர்பிளை பாடல் வரிகள்

Movie Name
Meera (1992) (மீரா)
Music
Ilaiyaraaja
Year
1992
Singers
Asha Bhosle, S. P. Balasubramaniam
Lyrics
ஓ... பட்டர்பிளை பட்டர்பிளை
ஏன் விரித்தாய் சிறகை வா வா
ஓ... பட்டர்பிளை பட்டர்பிளை
ஏன் விரித்தாய் சிறகை
அருகில் நீ வருவாயோ
உனக்காகத் திறந்தேன் மனதின் கதவை

ஆஹா.... ஓ... பட்டர்பிளை பட்டர்பிளை
ஏன் விரித்தாய் சிறகை வா வா
ஓ... பட்டர்பிளை பட்டர்பிளை
ஏன் விரித்தாய் சிறகை
எனையும் தான் உன்னைப் போலே
படைத்தானே இறைவன் எனும் ஓர் தலைவன்

நெருங்கும் போது அகப்படாமல் பறந்து போகிறாய்
நிழலைப் போல தொடரும் என்னை மறந்து போகிறாய்

ஆஹா உனக்கு யாரும் தடையும் இங்கு விதிப்பதில்லையே
ஆஹா எனக்கும் கூட அடிமைக் கோலம் பிடிப்பதில்லையே

உனை நான் சந்தித்தேன் உனையே சிந்தித்தேன்
எனை நீ இணை சேரும் திருநாள் வருமோ பட்டர்பிளை பட்டர்பிளை

ஆஹா.... ஓ... பட்டர்பிளை பட்டர்பிளை

மலர்கள் தோறும் நடந்து போகும் சிறிய ஜீவனே
உந்தன் மனதைக் கொஞ்சம் இரவல் கேட்கும் எனது ஜீவனே

ஆஹா விழிகள் நூறு கடிதம் போட்டும் பதில்கள் இல்லையே
விரக தாபம் அனலை மூட்டும் பருவம் தொல்லையே

உன்னை நான் கொஞ்சத்தான் மடிமேல் துஞ்சத்தான்
தினம் நான் எதிர்பார்க்கும் திருநாள் வருமோ பட்டர்பிளை பட்டர்பிளை

ஓ... பட்டர்பிளை பட்டர்பிளை
ஏன் விரித்தாய் சிறகை

வாவா ஓ... பட்டர்பிளை பட்டர்பிளை
ஏன் விரித்தாய் சிறகை

அருகில் நீ வருவாயோ
உனக்காகத் திறந்தேன் மனதின் கதவை

ஆஹா ஓ... பட்டர்பிளை பட்டர்பிளை பட்டர்பிளை ...

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.