என்ன பழக்கம் இது பாடல் வரிகள்

Movie Name
Majaa (2005) (மஜா)
Music
Vidyasagar
Year
2005
Singers
Harini, Karthik, Shankar Mahadevan
Lyrics
சீ!சீ!சீ! என்ன பழக்கம் இது? சின்ன புள்ள போல
பித்து பிடிக்கிறதே தொட்டுவிட்டதால 
சிச்சிசிச்சிசீசீ…
ம்ம்.. வம்பு பண்ணுவ நீ வம்பு பண்ணுவ
அடி எப்பவுமே இப்படி தான் ரொம்ப பண்ணுவ
கிச்சி பண்ணுவ கிச்சி கிச்சி பண்ணுவ
என்ன அங்க இங்க தொட்டு தொட்டு தப்பு பண்ணுவ
என்ன பண்ணுவ இப்ப என்ன பண்ணுவ
உன்ன என்னன்னமோ பண்ணபோறேன் என்ன பண்ணுவ
சிச்சிசிச்சிசீசீ…..

என்னுடைய ஆசை எட்டி தொட துடிக்க
உன்னுடைய ஆசை தட்டி விட நினைக்க
நம்முடைய ஆசை திக்கு தேடி தவிக்க
என்னுடிய தேகம் ஒத்தையில படுக்க
உன்னுடைய தேகம் தொந்தரவு கொடுக்க
நம்முடைய தேகம் வெட்கதுல வெடிக்க
உன் கொலுசு மணி போல நான் சிணுங்கி சிணுங்கியே கிடக்க
என்வயசு பதனீறு நீ கலந்து கலந்து தேன் குடிக்க
நீ அள்ளி எடுக்க நான் கிள்ளி கொடுக்க
அடி மொத்தத்துல தூக்கம் கெட்டு கண்கள் சிவக்க
சிச்சிசிச்சிசீசீ… ஆஹா….அய்யோ…. ம்ம்….

நள்ளிரவு நேரம் வெண்ணிலவு தொலைக்க
நந்தவன பூவை வண்டு வந்து தொலைக்க
வந்துவிடு நீயும் என்னுயிரை தொலைக்க
நெத்தி முடியோரம் நித்திரையை தொலைக்க
நெஞ்சிக்குழியோரம் நிம்மதியை தொலைக்க
அள்ளி தருவேனே அத்தனையும் தொலைக்க
உன் இலவம்பஞ்சி உடம்பில் என் இளமை முழுவதும் தொலைக்க
உன் சலவ செஞ்ச சிரிப்பில் நான் சகல அழகையும் தொலைக்க
நீ உன்ன தொலைக்க நான் என்னை தொலைக்க
அடி மெத்தையிலே ரெண்டுபேறும் சேர்ந்து பொழைக்க

சிச்சிசிச்சிசீசீ…
என்ன பழக்கம் இது…சின்னபிள்ளை போல
பித்து பிடிக்கிறதே தொட்டுவிட்டதால
சிச்சிசிச்சிசீசீ…
ம்ம்.. வம்பு பண்ணுவ நீ வம்பு பண்ணுவ
அடி எப்பவுமே இப்படி தான் ரொம்ப பண்ணுவ
கிச்சி பண்ணுவ கிச்சி கிச்சி பண்ணுவ
என்ன அங்க இங்க தொட்டு தொட்டு தப்பு பண்ணுவ
என்ன பண்ணுவ இப்ப என்ன பண்ணுவ
உன்ன என்னன்னமோ பண்ணபோறேன் என்ன பண்ணுவ
சிச்சிசிச்சிசீசீ….. 

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.