இந்த நாள் நல்ல பாடல் வரிகள்

Movie Name
Vetri Mel Vetri (1989) (வெற்றி மேல் வெற்றி)
Music
Vijay Anand
Year
1989
Singers
S. P. Balasubramaniam, Vidya
Lyrics
S. Malarmaran
பெண் : இந்த நாள் நல்ல நாளே எந்தன் கையில் ஆடவா
தங்கமே சொந்தம் நீயே கொஞ்சிக் கொஞ்சி பேசவா
ஆண் : என் கவிதைகள் தோன்றும் உன் சிரிப்பினிலே
என் மனதினில் என்றும் உன் நினைவுகளே

பெண் : இந்த நாள் நல்ல நாளே எந்தன் கையில் ஆடவா
தங்கமே சொந்தம் நீயே கொஞ்சிக் கொஞ்சி பேசவா

ஆண் : இளமை துடிப்பில் வந்து
ஏக்கம் பிறக்குது இதழில் கவிதை எழுது
பெண் : தனிமை நெருப்பில் இந்த
தேகம் கொதிக்குது தழுவ துடிக்கும் வயது

ஆண் : ரோஜா மலர்களில் பனித்துளி என வந்து
நானும் விழுந்திடவா
பெண் : ராஜா மடியினில் விடிகிற வரையினில்
நானும் உறங்கிடவா

ஆண் : மயக்கும் பூங்கொடி தயக்கம் ஏனடி
பெண் : மஞ்சம் அழைக்குது நெஞ்சம் தவிக்குது
ஆண் : மஞ்சம் அழைக்குது நெஞ்சம் தவிக்குது
தினம் ஒரு கவி படிப்போம்

பெண் : இந்த நாள் நல்ல நாளே எந்தன் கையில் ஆடவா
தங்கமே சொந்தம் நீயே கொஞ்சிக் கொஞ்சி பேசவா
ஆண் : என் கவிதைகள் தோன்றும் உன் சிரிப்பினிலே
என் மனதினில் என்றும் உன் நினைவுகளே

ஆண் : அழகு குலுங்க வரும் அன்னக்கொடி உன்னை
ரசிக்கும் எனது மனது
பெண் : உனது விழிகள் சொல்லும் மோகக் கதைகளை
அறியும் எனது மனது

ஆண் : ஏதோ நினைவினில் புதுவகை கனவினில்
இதயம் மகிழ்ந்திருக்கு
பெண் : காதல் அரசி அருகினில் இருக்கையில்
வேறோர் நினைவெதுக்கு

ஆண் : அழகின் சிரிப்பிலே ஆசை வளருது
பெண் : கண்கள் சிவக்குது உள்ளம் துடிக்குது
ஆண் : கண்கள் சிவக்குது உள்ளம் துடிக்குது
புது கதை தொடரட்டுமே

பெண் : இந்த நாள் நல்ல நாளே எந்தன் கையில் ஆடவா
தங்கமே சொந்தம் நீயே கொஞ்சிக் கொஞ்சி பேசவா
ஆண் : என் கவிதைகள் தோன்றும் உன் சிரிப்பினிலே
என் மனதினில் என்றும் உன் நினைவுகளே

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.