மல்லின்னா மல்லிதான் மானாமதுர பாடல் வரிகள்

Movie Name
Vetri Mel Vetri (1989) (வெற்றி மேல் வெற்றி)
Music
Vijay Anand
Year
1989
Singers
S. P. Balasubramaniam
Lyrics
Muthulingam
ஆண் : மல்லின்னா மல்லிதான் மானாமதுர மல்லிதான்
மில்லின்னா மில்லிதான் எங்க ஊரு மில்லிதான்
பாட்டில பாத்துப்புட்டா போதையும் ஏறுதடா
போதைய ஏத்திப்புட்டா பாதையும் மாறுதடா
பாதைய மாத்திப்புட்டும் சங்கீதம் வந்ததடா அடோய்

குழு : மல்லின்னா மல்லிதான் மானாமதுர மல்லிதான்
மில்லின்னா மில்லிதான் எங்க ஊரு மில்லிதான்

ஆண் : சொந்தம் பந்தம் யாருமில்ல
எங்க நெஞ்சிலே பேதமில்ல
குழு : எங்க நெஞ்சிலே பேதமில்ல
ஆண் : வேல வெட்டி ஏதுமில்ல
தட்டிக் கேக்க ஆளுமில்ல
குழு : ஆமாம் தட்டிக் கேக்க ஆளுமில்ல

ஆண் : ஹேய் தெனமும் ராஜயோகந்தான்
ஏழை விடும் கண்ணீருக்கு ரத்தத்தையும் சிந்திடுவோம்
கெடச்சதை அள்ளித் தந்து கர்ணனையும் மிஞ்சிடுவோம்
சாமி இந்த பூமி எங்கும் காஞ்சி கெடக்கு
ரெண்டு போட்டா வரும் நோட்டு வெறும் பேச்சு எதுக்கு

ஆண் : மல்லின்னா மல்லிதான் மானாமதுர மல்லிதான்
மில்லின்னா மில்லிதான் எங்க ஊரு மில்லிதான்
பாட்டில பாத்துப்புட்டா போதையும் ஏறுதடா..டோய்...
போதைய ஏத்திப்புட்டா பாதையும் மாறுதடா
பாதைய மாத்திப்புட்டும் சங்கீதம் வந்ததடா ஹாங்....

குழு : மல்லின்னா மல்லிதான் மானாமதுர மல்லிதான்
மில்லின்னா மில்லிதான் எங்க ஊரு மில்லிதான்

ஆண் : தத்துவம் பேசிக்கிட்டு ஜாதி சண்டைய வளக்குறான்
குழு : அட சாதி சண்டைய வளக்குறான்
ஆண் : கூட்டணி வச்சிக்கிட்டு ரூட்ட மாத்தி பொழைக்குறான்
குழு : ஆமாம் ரூட்ட மாத்தி பொழைக்குறான்

ஆண் : ஒலகம் கண்ணாமூச்சிதான்..ஹோய்..ஹோய்..
ஆளுக்கொரு கொடியேத்தி நாடு ஒரு வழியாச்சி
நல்லவங்க சொல்லி வெச்ச வார்த்தையெல்லாம் பொய்யாச்சு
காலம் கெட்டுப் போச்சு தெனம் போட்டோம் சரக்கு
இப்ப நீயும் கொஞ்சம் ஊத்து அப்ப தெரியும் உனக்கு

குழு : மல்லின்னா மல்லிதான் மானாமதுர மல்லிதான்
மில்லின்னா மில்லிதான் எங்க ஊரு மில்லிதான்
போடு மல்லின்னா மல்லிதான் மானாமதுர மல்லிதான்
மில்லின்னா மில்லிதான் எங்க ஊரு மில்லிதான்

ஆண் : பாட்டின்னா பாட்டிதான் டாப்பு டக்கரு பாட்டிதான்
டக்கருன்னா டக்கருதான் டாப்பு டக்கரு டக்கருதான்
ஜிகுருத்தக்க ஜிகிர்னா ஜிகுருத்தக்க ஜிகிர்னா
சுருதின்னா சுருதி யப்பா சுருதி....

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.