நூறாண்டுகள் நீ வாழவே பாடல் வரிகள்

Last Updated: Jun 07, 2023

Movie Name
Manaivi Oru Manthiri (1988) (மனைவி ஒரு மந்திரி)
Music
Shankar-Ganesh
Year
1988
Singers
Malasiya Vasudevan, Vani Jayaram
Lyrics
Muthulingam
ஆண் : நூறாண்டுகள் நீ வாழவே
என் நெஞ்சம் வாழ்த்துதே
விழிகளைக் காக்கும் இமைகளைப் போலே
விழிகளைக் காக்கும் இமைகளைப் போலே
உனக்காக நான் வாழுவேன்

பெண் : நூறாண்டுகள் நீ வாழவே
என் நெஞ்சம் வாழ்த்துதே
விழிகளைக் காக்கும் இமைகளைப் போலே
விழிகளைக் காக்கும் இமைகளைப் போலே
உனக்காக நான் வாழுவேன்

ஆண் : நூறாண்டுகள் நீ வாழவே
என் நெஞ்சம் வாழ்த்துதே

பெண் : பூந்தென்றல் காற்றும் பூபாள பாட்டும்
எப்போதும் உன் வாழ்வில் வீசும்
பூந்தென்றல் காற்றும் பூபாள பாட்டும்
எப்போதும் உன் வாழ்வில் வீசும்

ஆண் : நீ போகும் பாதை நிழலாடும் சோலை
பொன் மேகம் உனை வாழ்த்துமே
அது பூத்தூவி இசை பாடுமே...
அது பூத்தூவி இசை பாடுமே...

பெண் : நூறாண்டுகள் நீ வாழவே
என் நெஞ்சம் வாழ்த்துதே
ஆண் : விழிகளைக் காக்கும் இமைகளைப் போலே
உனக்காக நான் வாழுவேன்
பெண் : நூறாண்டுகள் நீ வாழவே
என் நெஞ்சம் வாழ்த்துதே

ஆண் : எதிர்காலம் ஒன்று எல்லோர்க்கும் உண்டு
எண்ணங்கள் ஈடேறும் அன்று
எதிர்காலம் ஒன்று எல்லோர்க்கும் உண்டு
எண்ணங்கள் ஈடேறும் அன்று

பெண் : உனக்கான வேளை உருவாகும் நாளை
ராஜாங்கம் நீ ஆளலாம்
என்றும் அழியாத கதை ஆகலாம்
என்றும் அழியாத கதை ஆகலாம்

ஆண் : நூறாண்டுகள் நீ வாழவே
என் நெஞ்சம் வாழ்த்துதே
பெண் : விழிகளைக் காக்கும் இமைகளைப் போலே
உனக்காக நான் வாழுவேன்
இருவரும் : லாலா...லாலா..லாலாலாலா...லாலாலா...

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.