பூங்காற்றே.......கேளாயோ..ஓஓஓஓ.... பாடல் வரிகள்

Movie Name
Solaikuyil (1989) (சோலைக்குயில்)
Music
M. S. Murari
Year
1989
Singers
K. S. Chitra
Lyrics
Muthulingam
பூங்காற்றே.......கேளாயோ..ஓஓஓஓ....
சோலைக் குயில் நெஞ்சுக்குள்ளே
சோகம் அதன் கண்ணுக்குள்ளே
அது தனியாக தவிக்குது இங்கே
இதை அறிவாயோ சிறுமலைக் காற்றே
துயர் தீர ஒரு வார்த்தை நீ சொல்ல வா ( 2 )

நீலக் குயிலும் நெஞ்சு உருகி
நிம்மதி இல்லாமல் கூவுதய்யா
துள்ளித் திரிஞ்ச புள்ளி மயிலோ
துன்பமெனும் முள் மேலே ஆடுதய்யா

இந்த நிலை எந்நாளும் மாறாதோ
ஏக்கம் இது யாராலும் தீராதோ இனி
உனைக் காண மறு ஜென்மம் உருவாகுமோ

சோலைக் குயில் நெஞ்சுக்குள்ளே
சோகம் அதன் கண்ணுக்குள்ளே
அது தனியாக தவிக்குது இங்கே
இதை அறிவாயோ சிறுமலைக் காற்றே
துயர் தீர ஒரு வார்த்தை நீ சொல்ல வா

உள்ளுக்குள்ளேயே ஊமை அழுதால்
ஊரு சனம் அறியாது உண்மையிலே
அந்த வழியில் நானும் அழுதா
ஆறுதலும் யார் சொல்வார் வாழ்க்கையிலே

பிறப்பது நம்மோட விதியாகும்
இறப்பது அவனோட முடிவாகும் இதில்
யார் மீதும் குறை சொல்ல முடியாதய்யா

சோலைக் குயில் நெஞ்சுக்குள்ளே
சோகம் அதன் கண்ணுக்குள்ளே
அது தனியாக தவிக்குது இங்கே
இதை அறிவாயோ சிறுமலைக் காற்றே
துயர் தீர ஒரு வார்த்தை நீ சொல்ல வா..

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.