கொட்டுங்க கெட்டி மேளம் பாடல் வரிகள்

Movie Name
Solaikuyil (1989) (சோலைக்குயில்)
Music
M. S. Murari
Year
1989
Singers
S. P. Balasubramaniam
Lyrics
Vaali
கொட்டுங்க கெட்டி மேளம் அட கேட்கட்டும் அத எட்டு ஊரும்
ஊதுங்க நாதஸ்வரம் அம்மன் தேர் அதில் ஆடி வரும்
கொட்டுங்க கெட்டி மேளம் கேட்கட்டும் அத எட்டு ஊரும்
ஊதுங்க நாதஸ்வரம் அம்மன் தேர் அதில் ஆடி வரும்

குலமகள் நாச்சியம்மா நடப்பதுன் ஆட்சியம்மா
கண் மலர்ந்து எங்களுக்கு கைக் கொடுக்கும் அம்மனுக்கு
கொட்டுங்க கெட்டி மேளம் அட
கேட்கட்டும் அத எட்டு ஊரும்..

அம்மா உன் பார்வை வேண்டி அன்பனும் காத்திருக்க
அன்றாடம் ஏக்கம் கொண்டு அங்கமும் வேர்த்திருக்க
உனக்காக இதயம் ஒன்று இசை பாடுது
உறங்காத கண்கள் ரெண்டு உனைத் தேடுது

நீயின்றி நானுமில்லை ஸ்ரீதேவியே
நாள்தோறும் வாடும் உன்னால் என் ஆவியே
சிங்கார வண்ணம் கண்டு
சிந்து பாட பக்தன் உண்டு

கொட்டுங்க கெட்டி மேளம் கேட்கட்டும் அத எட்டு ஊரும்
ஊதுங்க நாதஸ்வரம் அம்மன் தேர் அதில் ஆடி வரும்..
குலமகள் நாச்சியம்மா நடப்பதுன் ஆட்சியம்மா
கண் மலர்ந்து எங்களுக்கு கைக் கொடுக்கும் அம்மனுக்கு

கொட்டுங்க கெட்டி மேளம் கேட்கட்டும் அத எட்டு ஊரும்..
ஊதுங்க நாதஸ்வரம் அம்மன் தேர் அதில் ஆடி வரும்

ஓயாமல் காலை மாலை அம்மனின் அர்ச்சனைதான்
வாயார பாடும் பாடல் அம்பிகை கீர்த்தனை தான்
அலங்கார வடிவம் கண்டு அலைபாய்கிறேன்
அபிஷேகம் புரியும் நாளை எதிர்பார்க்கிறேன்

ஆகாயம் பூமியெங்கும் ஒரு வண்ணமே
அடியே என் நெஞ்சில் என்றும் உன் எண்ணமே
எந்நாளும் சொந்தம் கொண்டு
ஏழு ஜென்மம் பந்தம் உண்டு

கொட்டுங்க கெட்டி மேளம் கேட்கட்டும் அத எட்டு ஊரும்
ஊதுங்க நாதஸ்வரம் அம்மன் தேர் அதில் ஆடி வரும்
குலமகள் நாச்சியம்மா நடப்பதுன் ஆட்சியம்மா
கண் மலர்ந்து எங்களுக்கு கைக் கொடுக்கும் அம்மனுக்கு

கொட்டுங்க கெட்டி மேளம் கேட்கட்டும் அத எட்டு ஊரும்..
கொட்டுங்க கெட்டி மேளம் கேட்கட்டும் அத எட்டு ஊரும்..

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.