மணி மணி மணி பாடல் வரிகள்

Movie Name
Solaikuyil (1989) (சோலைக்குயில்)
Music
M. S. Murari
Year
1989
Singers
S. P. Balasubramaniam, Lalitha
Lyrics
Kanmani Subbu
பெண் : மணி மணி மணி மணி மணி
மணி மணி மணி மணி மணி மணி மணி.....

ஆண் : கண்ணுல நிக்குது நெஞ்சுல சொக்குது மானே
அத நெனச்சு நெனச்சு உலகம் மறந்து போனேன்
கண்ணுல நிக்குது நெஞ்சுல சொக்குது மானே
அத நெனச்சு நெனச்சு உலகம் மறந்து போனேன்

மைவிழி மானுக்கும் ஆசை இருக்குது பாவம்
சொல்லட்டும் சேதிய மூடி மறைச்சென்ன லாபம்
அடி தூது போக யாரு வேணும் நான் தான் நீ தான்
கண்ணுல நிக்குது நெஞ்சுல சொக்குது மானே
அத நெனச்சு நெனச்சு உலகம் மறந்து போனேன்

வானம்....நீல வானம்...
இப்போ எந்தன் உள்ளங்கையில தான்
ராகம்.....நூறு ராகம்....
எல்லாம் உந்தன் கண்கள் தந்தது தான்

காதல் காட்டும் ஜாலம்
சொல்லச் சொல்ல பொங்கும் அற்புதமே
வாழ்வில் ஏது சோகம்
இங்கே அந்த சொர்க்கம் வந்திடுமே

ஒண்ணும் ஒண்ணும் ரெண்டா சேரணும்
ஒண்ணுக்குள்ள ஒண்ணா நிக்கணும்
கண்ணுக்குள்ள கண்ண வைக்கணும்
தாகம் உண்டாகும்

சின்னப் பொண்ணு காதைக் கிள்ளணும்
சின்னச் சின்ன சேதி சொல்லணும்
கன்னம் ரெண்டும் கையில் அள்ளணும்
தேகம் தள்ளாடும்..தகதின்னா

கண்ணுல நிக்குது நெஞ்சுல சொக்குது மானே
அத நெனச்சு நெனச்சு உலகம் மறந்து போனேன்

மைவிழி மானுக்கும் ஆசை இருக்குது பாவம்
சொல்லட்டும் சேதிய மூடி மறைச்சென்ன லாபம்
அடி தூது போக யாரு வேணும் நான் தான் நீ தான்

கண்ணுல நிக்குது நெஞ்சுல சொக்குது மானே
அத நெனச்சு நெனச்சு உலகம் மறந்து போனேன்

மாலை நேரக் காத்து
உன்னைத் தொட்டு என்னைத் தொட்டுடுச்சு
போதை ஏறிப் போச்சு
மெல்ல மெல்ல உள்ளம் கெட்டுடுச்சு

வாசம் வீசும் பூவே
என்னை எண்ணிப் பொட்டு வைக்கிறியே
சேரும் நேரம் பார்த்து
வெக்கப்பட்டு தள்ளி நிக்குறியே

வித்தாரமே வந்தா என்ன அத்தாரத்தான் தொட்டா என்ன
அச்சாரம் தான் தந்தா என்ன நாளும் சந்தோசம்
பித்தானதே அன்பே பைங்கிளி கொத்தாமலே விட்டா எப்படி
சித்தாடையில் என்னைக் கட்டுடி மேளம் தை மாசம்

கண்ணுல நிக்குது நெஞ்சுல சொக்குது மானே
அத நெனச்சு நெனச்சு உலகம் மறந்து போனேன்
மைவிழி மானுக்கும் ஆசை இருக்குது பாவம்
சொல்லட்டும் சேதிய மூடி மறைச்சென்ன லாபம்
அடி தூது போக யாரு வேணும் நான் தான் நீ தான்

கண்ணுல நிக்குது நெஞ்சுல சொக்குது மானே
அத நெனச்சு நெனச்சு உலகம் மறந்து போனேன்
அட தந்தனன தந்தானனனா தந்தனன தந்தானனனா
தந்தனன தந்தானனனா தந்தனன தந்தானனனா.....

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.