சின்னஞ்சிறுசுகள் கன்னம் உரசிட பாடல் வரிகள்

Last Updated: Feb 02, 2023

Movie Name
Solaikuyil (1989) (சோலைக்குயில்)
Music
M. S. Murari
Year
1989
Singers
Uma Ramanan, Prabakar
Lyrics
Chidambaranathan
பெண் : சின்னஞ்சிறுசுகள் கன்னம் உரசிட
தன்னந் தனிமையில் தம்மை மறந்திட
செண்பக சோலையும் பந்தலை போடுது
மன்மத பூவெடுத்து

புத்தம் புதுசிது முத்தம் பதித்திட
கட்டிப் பிடித்தது கற்றுக் கொடுத்திட
கூந்தலில் கைவிரல் பாய்ந்ததும்
சாய்ந்தது பெண் குயில் கண்ணயர்ந்து

சின்னஞ்சிறுசுகள் கன்னம் உரசிட
தன்னந் தனிமையில் தம்மை மறந்திட
செண்பக சோலையும் பந்தலை போடுது
மன்மத பூவெடுத்து..ஆஆஆஹா..ஆஆஆ...

பூங்கிளி கொஞ்சும்....ஹோஹோய்...
புல்வெளி மஞ்சம்.....ஹோஹோய்...
தோரணம் கட்டி.....ஹோஹோய்...வாவென்றது...

தேவதைமாக.......ஹோஹோய்...
தோழிகள் சூழ.......ஹோஹோய்...
வாழ்த்திட வந்தார்...ஹோஹோய்...பூவெடுத்து

வாலிப பூங்குயில் காதலில் பாடுது
வாசனை சோலையில் ஜோடியை தேடுது
ஓருயிர் ஈருடல் ஆகிடும் ஆசையில்
ரெக்கைகள் பின்னியதே....

காதலன் ஏந்திய கைவிரல் ஆயுதம்
காதலி கட்டிய தாவணிக் கோட்டையை
வென்றிட சென்றதும் ஆண்மகன் மார்பின்று
போர்க்களம் ஆனதுவே...

சின்னஞ்சிறுசுகள் கன்னம் உரசிட
தன்னந் தனிமையில் தம்மை மறந்திட
செண்பக சோலையும் பந்தலை போடுது
மன்மத பூவெடுத்து

புத்தம் புதுசிது முத்தம் பதித்திட
கட்டிப் பிடித்தது கற்றுக் கொடுத்திட
கூந்தலில் கைவிரல் பாய்ந்ததும்
சாய்ந்தது பெண் குயில் கண்ணயர்ந்து

சின்னஞ்சிறுசுகள் கன்னம் உரசிட
தன்னந் தனிமையில் தம்மை மறந்திட
செண்பக சோலையும் பந்தலை போடுது
மன்மத பூவெடுத்து.....ஆஆஆஆஆ..ஆஆஆ...

ஆண் : பூவிழி பார்வையில் ஆயிரம் ஆயிரம்
வேல் முனை பாய்ந்ததடி...ஆஆஆ...
பெண் : காதலன் கை விரல்
ஆவியில் பாய்ந்ததும் அற்புதம் நேர்ந்ததடி

ஆண் : நகங்கள் உளிப் போல் பதிந்தால் சுகந்தானே
பெண் : யுகங்கள் இது போல் தொடர்ந்தால் நலந்தானே

இருவரும் : பூவிழி பார்வையில் ஆயிரம் ஆயிரம்
வேல் முனை பாய்ந்ததடி...ஆஆஆ...
பூவிழி பார்வையில் ஆயிரம் ஆயிரம்
வேல் முனை பாய்ந்ததடி...ஆஆஆ...
குழு : லாலலலாலா...ஆஆஆஆ..ம்ம்ம்ம்....

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.