குத்தாலம் அருவியிலே பாடல் வரிகள்

Last Updated: Jan 29, 2023

Movie Name
Nallavan Vazhvan (1961) (நல்லவன் வாழ்வான்)
Music
T. R. Pappa
Year
1961
Singers
P. Leela, Seerkazhi Govindarajan
Lyrics
Vaali
அன்புக் கரத்தாலே,ஆசை மனத்தாலே
அள்ளித் தெளிக்கையிலே உம் சொல்லுங்க

குத்தாலம் அருவியிலே குளிச்சதுபோல் இருக்குதா 
குத்தாலம் அருவியிலே குளிச்சதுபோல் இருக்குதா 
மனசை மயக்குதா சுகமும் கிடைக்குதா
மனசை மயக்குதா சுகமும் கிடைக்குதா 
குத்தாலம் அருவியிலே குளிச்சதுபோல் இருக்குதா

உடம்பு சிலுக்குது உள்ளம் சிரிக்குது
உடம்பு சிலுக்குது உள்ளம் சிரிக்குது
கொட்டும் பனிக் கடலுக்குள்ளே
குதிச்சதுபோல் இருக்குது
கொட்டும் பனிக் கடலுக்குள்ளே
குதிச்சதுபோல் இருக்குது

பட்டுப் போல் ரோஜாப்பூவு பனித்துளியில் குளிக்குது
பறக்கும் வண்டுகளெல்லாம் தேனில் குளிக்குது

கட்டறுந்த இளமனசு காதலிலே குளிக்குது
காத்திருக்கும் நமக்கும் நல்ல காலம் வரப்போகுது

காத்திருக்கும் நமக்கும் நல்ல காலம் வரப்போகுது
குத்தாலம் அருவியிலே குளிச்சதுபோல் இருக்குதா

ஊற்றெடுக்கும் வேர்வையிலே ஒரு மனசு குளிக்குது
காற்றைக் குடிச்சுக்கிட்டு கண்ணீரில் மிதக்குது

உல்லாசக் கோட்டை கட்டி உச்சியிலே கொடியும் கட்டி
பல்லாண்டுப் பாடி ஒண்ணு களிக்குது
உல்லாசக் கோட்டை கட்டி உச்சியிலே கொடியும் கட்டி
பல்லாண்டுப் பாடி ஒண்ணு களிக்குது
பன்னீர ஊத்தி ஊத்திக் குளிக்குது ச்...ச்...ச்...

குத்தாலம் அருவியிலே குளிச்சதுபோல் இருக்குதா

தங்கம் போல் உடம்பை தொட்டா தனிமயக்கம் பிறக்குது
தங்கம் போல் உடம்பை தொட்டா தனிமயக்கம் பிறக்குது

சிங்கார கையு பட்டா சிலுசிலுப்பா இருக்குது
சிங்கார கையு பட்டா சிலுசிலுப்பா இருக்குது

குத்தாலம் அருவியிலே குளிச்சதுபோல் இருக்குதா

குத்தாலம் அருவியிலே குளிச்சதுபோல் இருக்குது
மனசை மயக்குது சுகமும் கிடைக்குது
குத்தாலம் அருவியிலே குளிச்சதுபோல் இருக்குது
குத்தாலம் அருவியிலே குளிச்சதுபோல் இருக்குது

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.