இன்னிசை பாடிவரும் பாடல் வரிகள்

Last Updated: Oct 01, 2023

Movie Name
Thulladha Manamum Thullum (1999) (துள்ளாத மனமும் துள்ளும்)
Music
S. A. Rajkumar
Year
1999
Singers
P. Unnikrishnan
Lyrics
Vaali
இன்னிசை பாடிவரும் இளம் காற்றுக்கு உருவமில்லை
காற்றலை இல்லையென்றால் ஒரு பாட்டொலி கேட்பதில்லை
ஒரு கானம் வருகையில் உள்ளம் கொள்ளை போகுதே
ஆனால் காற்றின் முகவரி கண்கள் அறிவதில்லையே
இந்த வாழ்க்கையே ஒரு தேடல்தான்
அதை தேடித் தேடி தேடும் மனது தொலைகிறதே

இன்னிசை பாடிவரும் இளம் காற்றுக்கு உருவமில்லை
காற்றலை இல்லையென்றால் ஒரு பாட்டொலி கேட்பதில்லை

கண் இல்லையென்றாலோ நிறம் பார்க்கமுடியாது
நிறம் பார்க்கும் உன் கண்ணை நீ பார்க்கமுடியாது
குயிலிசை போதுமே அட குயில் முகம் தேவையா
உணர்வுகள் போதுமே அதன் உருவம் தேவையா
கண்ணில் காட்சி தோன்றிவிட்டால் கற்பனை தீர்ந்துவிடும்
கண்ணில் தோன்றா காட்சியில்தான் கற்பனை வளர்ந்துவிடும்
அட பாடல் போல தேடல் கூட ஒரு சுகமே

இன்னிசை பாடிவரும் இளம் காற்றுக்கு உருவமில்லை
காற்றலை இல்லையென்றால் ஒரு பாட்டொலி கேட்பதில்லை

உயிர் ஒன்று இல்லாமல் உடல் இங்கு நிலையாதே
உயிர் என்ன பொருள் என்று அலைபாய்ந்து திரியாதே
வாழ்க்கையின் வேர்களே நம் ரகசியமானது
ரகசியம் காண்பதே மிக அவசியமானது
தேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசியிருக்கும்
தேடல் என்பது உள்ளவரை வாழ்வில் ருசியிருக்கும்
அட பாடல் போல தேடல் கூட ஒரு சுகமே

இன்னிசை பாடிவரும் இளம் காற்றுக்கு உருவமில்லை
காற்றலை இல்லையென்றால் ஒரு பாட்டொலி கேட்பதில்லை
ஒரு கானம் வருகையில் உள்ளம் கொள்ளை போகுதே
ஆனால் காற்றின் முகவரி கண்கள் அறிவதில்லையே
இந்த வாழ்க்கையே ஒரு தேடல்தான்
அதை தேடித் தேடி தேடும் மனது தொலைகிறதே

இன்னிசை பாடிவரும் இளம் காற்றுக்கு உருவமில்லை
காற்றலை இல்லையென்றால் ஒரு பாட்டொலி கேட்பதில்லை

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.