வாய்க்காலு வரப்புல ராக்கோழி கூவுது பாடல் வரிகள்

Movie Name
Thangamana Purushan (1989) (தங்கமான புருசன்)
Music
Shankar-Ganesh
Year
1989
Singers
S. P. Balasubramaniam, S. P. Sailaja
Lyrics
Vaali
ஆண் : வாய்க்காலு வரப்புல ராக்கோழி கூவுது
ராக்கோழி கூவியே ராசாவை எழுப்புது
பாவாட அணிஞ்ச நெலவு நீரோட தேடும் படகு
ஆத்தோரம் நடக்குது

பெண் : வாய்க்காலு வரப்புல ராக்கோழி கூவுது
ராக்கோழி கூவியே ராசாவை எழுப்புது
பாவாட அணிஞ்ச நெலவு நீரோட தேடும் படகு
ஆத்தோரம் நடக்குது

ஆண் : பால் நிலாவும் ஊர் உலாவும் பாதி சாமம்தான்
பசும் புல்லு பாயாச்சு தலகாணி நீயாச்சு
பெண் : ஜீவ நாத்தும் ஏரிக்காத்தும் சேரும் நேரந்தான்
எனக்கேதோ நெனப்பாச்சு பனி மூட்டம் நெருப்பாச்சு

ஆண் : தூங்காம ஏங்காதோ தங்கமானும்
தண்ணீரத் தேடாதோ கெண்ட மீனு

பெண் : வாய்க்காலு வரப்புல ராக்கோழி கூவுது
ராக்கோழி கூவியே ராசாவை எழுப்புது
ஆண் : பாவாட அணிஞ்ச நெலவு நீரோட தேடும் படகு
ஆத்தோரம் நடக்குது

பெண் : வாய்க்காலு வரப்புல ராக்கோழி கூவுது
ராக்கோழி கூவியே ராசாவை எழுப்புது

மூப்பு வந்த மாமனுக்கு முதுகெலும்பு இல்லையின்னு
சூப்பு வச்சுக் கொடுத்தாளாம் செப்பு செல சுப்பாயி
சூப்பெடுத்து குடிச்சுப்புட்டு சுர்ர்ன்னுதான் கொறட்டவிட்டு
ராப்பொழுது தூங்கிப்புட்டான் ரோஷம் கெட்ட புத்தி மவன்
கேட்டீங்களா இந்தக் கத காங்கேயம் காளைகளா
வாயிருந்தா சிரிப்பீங்க வேடிக்கை பாத்தீங்களா..

பெண் : சோறு ஏது தூக்கம் ஏது ஆறு மாசந்தான்
நான் வாங்கும் உள்மூச்சு உன்னாலே சூடாச்சு
ஆண் : வேரப் பாத்து நீர ஊத்த மேகம் வாராதா
தூறல்தான் போட்டாச்சு தோட்டந்தான் பூத்தாச்சு
பெண் : ஆத்தாடி அம்மாடி இந்த நேரம்
காத்தாட போவோமா ரொம்ப தூரம்

ஆண் : வாய்க்காலு வரப்புல ராக்கோழி கூவுது
ராக்கோழி கூவியே ராசாவை எழுப்புது
பெண் : பாவாட அணிஞ்ச நெலவு
நீரோட தேடும் படகு ஆத்தோரம் நடக்குது

தானான தனேனனா தானான தனேனனா
தானான தனேனனா தானான தனேனனா....

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.