மாப்பிள்ளையே மாப்பிள்ளையே கோபமா பாடல் வரிகள்

Last Updated: Jul 15, 2026

Movie Name
Konjum Kumari (1963) (கொஞ்சும் குமரி)
Music
Vedha
Year
1963
Singers
P. Susheela
Lyrics
Vaali

மாப்பிள்ளையே மாப்பிள்ளையே கோபமா
மொறச்சு பாக்காதய்யா மொகத்த சுளிக்காதய்யா
பூமாலை மாற்றி விட்டால் போதுமா
ஏய்க்க முடியாதய்யா ஏய்க்க முடியாதய்யா (மாப்பிள்ளையே)

ஆட வந்த ஆட்டமெல்லாம் முடிஞ்சுதா என்
ஆசை முகம் பார்க்க உனக்கு கசந்ததா
வலிய வந்த அல்லி என்று வெறுத்தியா நான்
வலிமையுள்ள வில்லி என்பதை மறுப்பியா (மாப்பிள்ளையே)

ஊரு விட்டு ஊரு போற ராஜாவே உன்ன
உசிரவிட்டு காதலிச்ச ரோஜாவ
வாட விட்டு ஓடி போக முடியுமா இப்போ
ஆடிகிட்டு முழிப்பது யார் தெரியுமா (மாப்பிள்ளையே)

கூட்டுக்குள்ளே சிங்கம் போலே முழிக்கிறே இந்த
குமரிப் பெண்ண பார்த்து என்ன மொறைக்கிறே
காட்டு ராணி உதவி இப்போ வேணுமா நானும்
கூட வர சம்மதிக்க முடியுமா....(மாப்பிள்ளையே)