ஒரு தேதி பார்த்தா பாடல் வரிகள்

Movie Name
Coimbatore Mappillai (1996) (கோயமுத்தூர் மாப்ளே)
Music
Vidyasagar
Year
1996
Singers
Hariharan, Sadhana Sargam
Lyrics
Vaali
ஒரு தேதி பார்த்தா தென்றல் வீசும்
ஒரு கேள்வி கேட்டா முல்லைபேசும்

உயிர் நாடியெங்கும் அனல் மூட்டும்
உன்னை தீண்ட தீண்ட சுகம் காட்டும்

முதல் முதல் தொடும் போது
மடல் விடும் உயிர் காதல்
வா வா எந்தன் வாழ்வே

ஒரு தேதி பார்த்தா தென்றல் வீசும்
ஒரு கேள்வி கேட்டா முல்லைபேசும்

உயிர் நாடியெங்கும் அனல் மூட்டும்
உன்னை தீண்ட தீண்ட சுகம் காட்டும்

பார்வை மீது உந்தன் பேரெழுதி
மனப்பாடம் செய்யும் இந்த பூங்குருவி

நேரில் ஆடி வரும் தேன் அருவி
இதில் நீந்த வேண்டும் இந்த ஆண் குருவி

கோடையிலும் இதழ் காய்வதில்லை
ஆசையின் அலை தான் ஓய்வதில்லை

காதல் கதை என்றும் தோற்றதில்லை
தேவனின் விதியில் மாற்றம் இல்லை

நாள் முழுக்க உந்தன் ஞாபகம் தான்
எதிர்பார்த்திருக்கும் இந்த பூ முகம் தான்

ஒரு தேதி பார்த்தா தென்றல் வீசும்
ஒரு கேள்வி கேட்டா முல்லைபேசும்

உயிர் நாடியெங்கும் அனல் மூட்டும்
உன்னை தீண்ட தீண்ட சுகம் காட்டும்

போடவேண்டும் ஒரு பூ விலங்கை
இசை பாடவேண்டும் உந்தன் கால் சலங்கை

ஏற்றவேண்டும் சின்ன பூ திரியை
அதை பார்க்க வேண்டும் முதல் ராத்திரியை

தாமரையே சிறு வான்பிரையே
மார்பினில் வழியும் தேன் மழையே

காதலனே இசை பாடகனே
கீதங்கள் பொழியும் பாவலனே

நீ இல்லையேல் இங்கு நான் இல்லையே
குளிர் நீர் இல்லையே துள்ளும் மீன் இல்லையே

ஒரு தேதி பார்த்தா தென்றல் வீசும்
ஒரு கேள்வி கேட்டா முல்லைபேசும்

உயிர் நாடியெங்கும் அனல் மூட்டும்
உன்னை தீண்ட தீண்ட சுகம் காட்டும்

முதல் முதல் தொடும் போது
மடல் விடும் உயிர் காதல்

வா வா எந்தன் வாழ்வே

ஒரு தேதி பார்த்தா தென்றல் வீசும்
ஒரு கேள்வி கேட்டா முல்லைபேசும்

உயிர் நாடியெங்கும் அனல் மூட்டும்
உன்னை தீண்ட தீண்ட சுகம் காட்டும்

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.