ஜீவன் என் ஜீவன் பாடல் வரிகள்

Movie Name
Coimbatore Mappillai (1996) (கோயமுத்தூர் மாப்ளே)
Music
Vidyasagar
Year
1996
Singers
S. P. Balasubramaniam
Lyrics
ஜீவன் என் ஜீவன் எனை நீங்கி போகலாமா
காதல் என் காதல் அது ஏங்கி போகலாமா
விரலோடு பகல் இன்று பிடிவாதம் தனைகொண்டு
இனை தீயில் வீழலாமா

ஜீவன் என் ஜீவன் எனை நீங்கி போகலாமா
காதல் என் காதல் அது ஏங்கி போகலாமா

வானம் வேறு மேகம் வேறு பிரித்து பார்க்க கூடுமா
நீயும் நானும் வேறு வேறென்று பிரிக்க நெஞ்சம் தாங்குமா
தாமரையை நீர் தொடாததால் சொந்தமின்றி போகுமா
உதடுதானே பொய்கள் பேசுமா உயிரும் பொய்கள் பேசுமா
நிழல் எது நிஜம் எது அறியாது இளமாது

ஜீவன் என் ஜீவன் எனை நீங்கி போகலாமா
காதல் என் காதல் அது ஏங்கி போகலாமா

கரையில் மோதும் அலைகள் ஒயலாம் காதல் நெஞ்சம் ஒயுமா
வானில் தோன்றும் கதிரும் தேயலாம் காதல் நினைவு தேயுமா
நிலவில் கூட களங்கம் கானலாம் நெஞ்சில் அது ஏதம்மா
வானவில் கூட நிறங்கள் மாறலாம் நேசம் நிறம் மாறுமா
தலை சாய்க்க மடி தேடி யுகம் தோரும் வருவேனே

ஜீவன் என் ஜீவன் எனை நீங்கி போகலாமா
காதல் என் காதல் அது ஏங்கி போகலாமா

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.